லோக்சபா தேர்தல் வேலைகள் ஆரம்பமாயிடுச்சு...டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

Mar 22, 2024,01:00 PM IST

சென்னை: 2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல்  ஏப்ரல் 19ம் தேதி  நடைபெறுகிறது. இதன் எதிரொலியாக தேர்தல் நடைபெறும் போது தொடர்ந்து 48 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை மூட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.




தமிழகத்தில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை வாக்கு பதிவு நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்புகள் வெளி வந்ததில் இருந்து அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளை கட்சிகள் முடித்துள்ளன. தற்பொழுது வேட்பாளர்கள் பட்டியல்களும் வெளியிட்டு வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்திலும் சில கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.


ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்லை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளும், நடத்தை விதிமுறைகளும் தற்போது அமலில் இருந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதே போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி அன்றும் மதுக்கடைகளை மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்