2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

May 16, 2025,08:59 PM IST

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அங்கீகரிக்கப்படாத கட்சிகள், வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அனைவரின் ஒட்டுமொத்தக் கவனமும் விஜய்யின் தவெக பக்கம் திரும்பியுள்ளது.


இந்திய தேர்தல் ஆணையம் மாநில சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபா தேர்தல்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டசபைத் தேர்தல்களை சீராக, நியாயமாக மற்றும் சுதந்திரமாக நடத்துவது அதன் முக்கிய பொறுப்பாகும்.


தேர்தல்களை திட்டமிடுதல் மற்றும் நடத்துதல், தேதிகள், காலஅட்டவணைகள் மற்றும் தேர்தல் நிகழ்வுகளை அறிவித்தல், தேர்தல் விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை வகுத்தல், வாக்காளர் பட்டியலை புதுப்பித்தல் மற்றும் சரிபார்த்தல், அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளித்தல், கட்சிகள் மற்றும் சின்னங்கள் ஒதுக்கல், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சின்னங்களின் நிலையை பரிசீலித்தல், தேர்தல்களில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள், தேர்தல் குறித்த புகார்களை விசாரித்தல் மற்றும் தீர்வு காணுதல், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவித்தல் உள்ளிட்ட  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் முடிவுகள் சரிபார்த்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவது  இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணிகள் ஆகும்.




அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு ஆறு மாதம் முன்பாகவே பொதுச் சின்னம் கோரலாம் என்ற விதியின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 2026 ஆண்டு  நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட பணிகளை துவங்கியுள்ளது. அதன்படி, சட்டமன்ற தேர்தலுக்கு அங்கீகரிக்கப்படாத கட்சிகள், வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் ஏற்கனவே 2026 ஆம் ஆண்டு  தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு கட்சிகளும் தற்போதிலிருந்து போட்டோ போட்டி கொண்டு வருகின்றனர். இதற்காக கட்சியின் கட்டமைப்பு பணிகளை வலுப்படுத்துதல், தேர்தல் பணிகளை சீர்படுத்துதல், தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்தல், மாவட்டம் தோறும் களப்பணிகள் என பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, நாதக உள்ளிட்ட கட்சிகள் பிரதான கட்சிகளாக இருக்கும் நிலையில், அவரவர் சின்னங்களில் பல தேர்தல்களில் களம் கண்டுள்ளனர். 


நாம் தமிழர் கட்சி முதல் முறையாக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்று நிரந்தரச் சின்னமாக விவசாயி சின்னத்தையும் பெற்று விட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தான் முதல் முறையாக போட்டியிட உள்ளனர். விஜயின் வரவு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.  தேர்தல் குறித்த பணிகளில் விஜய் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தவெக தொண்டர்கள் மத்தியிலும், நிர்வாகிகள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், பேராதரவுடன் வலம் வருகின்றன. இதனால்  சட்டமன்ற தேர்தலில் தவெகவிக்கு அதிக ஓட்டுகள் பிரியும் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் தற்போது அதிகாரப்பூர்வமான கட்சி நடவடிக்கைகளை தவெக சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. 


இந்த நிலையில் தற்போது விஜய் கட்சிக்கு என்ன சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.  விஜய் அறிமுகப்படுத்திய கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள, வெற்றியை  நிலை நாட்டும் வாகை பூ சின்னம் கேட்பார்களா அல்லது இரண்டு போர் யானைகள் சின்னம் கேட்பார்களா.. இல்லை என்றால் 27 நட்சத்திரங்களை கொண்ட குறியீட்டை சின்னமாக கேட்பார்களா  என்று விதம் விதமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


விஜய் நடித்த படங்களான குருவி, வில்லு, ஆடு (GOAT) உள்ளிட்டவற்றை கேட்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சரி நீங்க சொல்லுங்க.. விஜய் என்ன சின்னம் கேட்க வாய்ப்புள்ளது?

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்

news

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!

news

புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!

news

தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

பாஜகவுக்கு செக் வைக்க.. இன்னொரு தமிழ்நாட்டுக்காரரை வேட்பாளராக்குமா இந்தியா கூட்டணி?

news

7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் ..இல்லாவிட்டால் புகார் வாபஸ்..ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன்கெடு

news

துணைக் குடியரசுத் தலைவர்.. யாரை வேட்பாளராக நிறுத்தலாம்?.. இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை!

news

ஜகதீப் தன்கர் டூ சி.பி. ராதாகிருஷ்ணன்.. ஒருவர் அரசியல் புயல்.. சிபி ராதாகிருஷ்ணன் எப்படி இருப்பார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்