டெல்லி: தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி சட்டிஸ்கர் மாநில சட்டசபைக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.
5 மாநில சட்டசபைத் தேர்தல் தேதி விவரம்:
மிஸோரம் சட்டசபை தேர்தல் - நவம்பர் 7ம் தேதி தேர்தல்
மத்தியப் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் - நவம்பர் 17
சட்டிஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் - நவம்பர் 7 மற்றும் 17
தெலங்கானா - நவம்பர் 30
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் - நவம்பர் 23
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
மிஸோரம் மாநில சட்டசபையின் ஆயுள் காலம் டிசம்பர் 17ம் தேதி முடிவடைகிறது. மற்ற மாநிலங்களுக்கு ஜனவரி மாதத்தில் பல்வேறு தேதிகளில் முடிவடையவுள்ளது. மிஸோரத்தில் மிஸோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் பாஜக ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்த முறை மொத்தம் 60 லட்சம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர். அதாவது இவர்கள் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள். முற்றிலும் இளைஞர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படும் 2900 வாக்குச் சாவடிகளை இந்த ஐந்து மாநில தேர்தலில் தேர்தல் ஆணையம் அமைக்கவுள்ளது.
சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை விவரம்:
மத்தியப் பிரதேசம் - 230 தொகுதிகள்
ராஜஸ்தான் - 230 தொகுதிகள்
தெலங்கானா - 119 தொகுதிகள்
சட்டிஸ்கர் - 90 தொகுதிகள்
மிஸோரம் - 40 தொகுதிகள்
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 16.14 கோடி
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}