போபால்: மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி பழிக்குப் பழிவாங்க காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு அது கைகூடாமல் போய் விட்டது. அதேசமயம், மீண்டும் வென்று 6வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது.
4 மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்படுகின்றன. அதில் ஒரு மாநிலம்தான் மத்தியப் பிரதேசம். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை வாழ்வா சாவா நிலையில் பாஜக இருந்தது. மறுபக்கம், காங்கிரஸ் கட்சிக்கு இதை விட மிகச் சிறந்த வாய்ப்பு மறுபடியும் கிடைக்காது என்ற நிலை நிலவியது.
முதலில், காலை முதலே இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன. இதனால் யார் ஆட்சியில் அமப் போவது என்பது குழப்பமாக இருந்தது. ஆனால் நேரம் ஆக ஆக பாஜக முன்னிலைக்கு வந்து விட்டது. இப்போது அது ஆட்சியை தக்க வைக்கும் நிலைக்குப் போய் விட்டது.
காங்கிரஸ் - பாஜக இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி உள்ளது. பாஜக மத்தியப் பிரதேசத்தில் இதுவரை 5 முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக சார்பில் முதல்வர் ஆன முதல் தலைவர் சுந்தர்லால் பட்வா. 1990ல் அவரது தலைமையில் முதல் பாஜக ஆட்சி இங்கு அமைந்தது. ஆனால் 3 ஆண்டுகளில் அது முடிந்து போனது. ஆட்சி காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.
அதன் பிறகு மீண்டும் 2003ம் ஆண்டுதான் பாஜக வசம் ஆட்சி வந்தது. ஆனால் அதன் பிறகு அங்கு பாஜக தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி விட்டது. 2003ம் ஆண்டு உமா பாரதி முதல்வரானார். இடையில் பாபுலால் கெளர் ஒரு வருடம் முதல்வராக இருந்தார். அதன் பின்னர் சிவராஜ் சிங் செளகானின் ஆதிக்கம் வந்து விட்டது. தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்துள்ளார் செளகான். அவரைத் தாண்டி அங்கு தற்போதைக்கு வேறு எந்த பாஜக தலைவரும் தலை தூக்க முடியாத நிலையே காணப்படுகிறது.
இடையில் 2018ம் ஆண்டு கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி புரட்சிகரமான வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இதனால் நிலை குலைந்து போன பாஜக படு வேகமாக சுதாரித்து தனது வேலையைக் காட்டியது. ஜோதிராதித்யா சிந்தியா மூலமாக காங்கிரஸ் கட்சியை உடைத்து, ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விட்டது பாஜக.
தனது கண் முன்பாகவே கஷ்டப்பட்டு பிடித்த ஆட்சியை பறி கொடுத்து விட்டு பதறிப் போய் நின்றார் கமல்நாத். அவராலும் சரி, காங்கிரஸ் கட்சியாலும் சரி அதைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது பீண்டும் ஒரு தேர்தல் வந்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன. எக்சிட் போல் முடிவுகளும் கூட அதையே தெரிவித்திருந்தன. ஆனால் கள நிலவரம் வேற மாதிரி ஆகி விட்டது. மீண்டும் பாஜகவே வெல்கிறது.
கமல்நாத்தின் பழிவாங்கும் ஆசை நிறைவேறாமல் போய் விட்டது.. பாஜகவோ 6வது முறையாக அங்கு தாமரைக் கொடியை பறக்க விட்டுள்ளது. 4வது முறையாக முதல்வர் பதவியில் செளகான் அமர்ந்து புதிய சாதனை படைக்கவுள்ளார்.
தெலங்கானாவில் காங்கிரஸ் clear leading.. சத்திஸ்கர், ம.பி, ராஜஸ்தானில் இழுபறி
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}