தெலங்கானாவில் காங்கிரஸ் clear leading.. சத்திஸ்கர், ம.பி, ராஜஸ்தானில் இழுபறி

Dec 03, 2023,09:36 AM IST
டெல்லி: தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை தட்டிப் பறிக்கிறது. தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி தனது ஆட்சியைப்  பறி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிஸோரம் மற்றும் சத்திஸ்கர் மாநில சட்டசபைகளுக்கு பல கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் மிஸோரம் மாநிலத்தைத் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மிஸோரம் மாநிலத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மக்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  முதல் கட்ட நிலவரப்படி தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவில் முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு தற்போது ஆட்சியில் உள்ள பிஆர்எஸ் கட்சி 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 3வது இடத்தில் பாஜக இருக்கிறது.  இங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் உருவான பிறகு நடந்த 3 தேர்தல்களில் 2 முறை பிஆர்எஸ் கட்சியே வெற்றி பெற்றது. தற்போது நடந்துள்ள 3வது தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.





சத்திஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது.  இங்கு ஆரம்பத்தில் காங்கிரஸ் நல்ல முன்னிலை பெற்றிருந்தது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாஜக முன்னிலைக்கு மாறியுள்ளது. 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானிலும் தற்போது இழுபறியே நிலவி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் சற்று பாஜகவின் கை ஓங்கியுள்ளது. ராஜஸ்தானில் இரு கட்சிகளுக்கும் இடையே பத்து தொகுதிகள் வித்தியாசம் உள்ளது. போகப் போகத்தான் யார் எந்த மாநிலத்தில் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது தெளிவாக தெரிய வரும்.


சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்