டெல்லி: ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பான எக்சிட் போல் எனப்படும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 3 மாநிலங்களிலும், பாஜகவுக்கு ராஜஸ்தானிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. மிஸோரம் மாநிலத்தில் மிஸோ தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, மிஸோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கர் ஆகிய மாநில சட்டசபைகளுக்குப் பல்வேறு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று இறுதிக் கட்டமாக தெலங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடந்தது.
வாக்குப் பதிவு முடிந்த நிலையில், வாக்களித்து விட்டு வந்தோரிடம் கருத்துக்களைக் கேட்டு அந்தக் கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பெருவாரியாக பார்க்கும்போது தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும் அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
அதேபோல மத்தியப் பிரதேசத்திலும், சட்டிஸ்கரிலும் கூட காங்கிரஸின் கையே ஓங்கியுள்ளது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை பாஜகவுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மிஸோரமில், மிஸோ தேசிய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.
எக்ஸிட் போல்களின் சுருக்கமான முடிவுகள்
மத்தியப் பிரதேசம்
ஜன் கி பாத் - காங்கிரஸ் 102 டூ 125. பாஜக 100 முதல் 123 வரை. பிறர் 5.
ரிபப்ளிக் டிவி - மேட்ரிஸ் - பாஜக 118 முதல் 130 வரை. காங்கிரஸ் 97 முதல் 107. பிறர் 2.
டிவி 9 பரத்வர்ஷ் - போல்ஸ்டிராட் - காங்கிரஸ் 111 முதல் 121 வரை. பாஜக 106 முதல் 116 வரை. பிறர் 6
ராஜஸ்தான்
ஜன் கி பாத் - பாஜக 100 டூ 122, காங்கிரஸ் 62 டூ 85, பிறர் 14-15
டைம்ஸ் நவ் இடிஜி - பாஜக 108 டூ 128, காங்கிரஸ் 56 டூ 72. பிறர் 13-21
டிவி 9 பரத்வர்ஷ் - போல்ஸ்டிராட் - பாஜக 100 டூ 110, காங்கிரஸ் 90 டூ 100. பிறர் 5-15
சட்டிஸ்கர்
ஏபிபி நியூஸ் சி வோட்டர் - காங்கிரஸ் 41-53. பாஜக 36 டூ 48. பிறர் 0-4
இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா - காங்கிரஸ் 40-50. பாஜக 36-46. பிறர் 1- 5.
இந்தியா டிவி சிஎன்எக்ஸ் - காங்கிரஸ் 46-56. பாஜக 30-40. பிறர் 3-5
ஜன் கி பாத் - காங்கிரஸ் 42-53. பாஜக 34-45. பிறர் 3
நியூஸ் 24 டுடே சானக்யா - காங்கிரஸ் 57, பாஜக 33.
ரிபப்ளிக் டிவி மேட்ரிஸ் - காங்கிரஸ் 44 -52, பாஜக 34-42. பிறர் 2.
டிவி 9 பரத்வர்ஷ் போல்ஸ்டிராட் - காங்கிரஸ் 40-50. பாஜக - 35-45. பிறர் 3.
தெலங்கானா
இந்தியா டிவி சிஎன்எக்ஸ் - காங்கிரஸ் - 63 டூ 79. டிஆர்எஸ் - 31 -47. பிறர் 5 டூ 7
ஜன் கி பாத் - காங்கிரஸ் 48 டூ 64. டிஆர்எஸ் 40-55. பிறர் 4 டூ 7.
மிஸோரம்
இந்தியா டிவி சிஎன்எக்ஸ் - மிஸோ தேசிய கூட்டணி 14-18. இசட் பிஎம் 12 -16. காங்கிரஸ் 8 -10. பாஜக 2
ஜன் கி பாத் - மிஸோ தேசிய கூட்டணி 10-14. இசட் பிஎம் 15 -25. காங்கிரஸ் 5 -9. பாஜக 2
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}