வாஷிங்டன்: நண்பனே எனது உயிர் நண்பனே என்று பாடாத குறையாக நெருக்கமான நட்புடன் வலம் வந்து கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப்பும், எலான் மஸ்க்கும் அதிரடியாக பிரிந்துள்ளனர். அதிலும் டிரம்ப் மீது கடும் கோபத்தைக் கக்கியுள்ளார் எலான் மஸ்க். நான் மட்டும் இல்லாட்டி டிரம்ப் ஜெயித்திருக்கவே முடியாது என்றும் அவர் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.
எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே ஒரு காலத்தில் இருந்த நட்பு, கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது பகையாக மாறியுள்ளது. டிரம்ப் அரசாங்கத்தின் கொள்கைகளை மஸ்க் விமர்சித்ததும், பதிலுக்கு டிரம்ப் மஸ்கை தாக்கியதும் இந்த மோதலுக்குக் காரணம். இந்த மோதல் அமெரிக்க அரசியல், வணிகம் மற்றும் விண்வெளி கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
சில நாட்களுக்கு முன்பு, டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது எலான் மஸ்க் அவரைப் புகழ்ந்தார். டிரம்ப், மஸ்கை "உலகின் தலைசிறந்த வணிகத் தலைவர்களில் மற்றும் புதுமைப்பித்தர்களில் ஒருவர்" என்று அழைத்தார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி டிரம்ப்பை "அரச பதவிக்கு தகுதியானவர்" என்று பாராட்டினார்.

இருப்பினும், அவர்களின் உறவில் விரிசல் விழுந்தது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கி பேசிக் கொண்டனர். சிபிஎஸ் தொலைக்காட்சி சானலுடனான ஒரு நேர்காணலில், மஸ்க் டிரம்ப்பின் முன்மொழியப்பட்ட சட்டத்தை விமர்சித்தார். இது ஒரு "பெரும் செலவு மசோதா" என்றும், இது கூட்டாட்சி பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும், தனது DOGE குழுவின் செயல்திறனை தடுக்கும் என்றும் கூறினார்.
ஒரு மசோதா பெரியதாகவோ அல்லது அழகாகவோ இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது இரண்டையும் கொண்டிருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை என்றார் மஸ்க். மறுபக்கம், எலான் மற்றும் எனக்கு ஒரு சிறந்த உறவு இருந்தது. இனிமேல் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. என்று கூறியிருந்தார் டிரம்ப்.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்திலும், மஸ்க் எக்ஸ் தளத்திலும் கருத்துக்களை பதிவிட்டனர். இதில் இப்போது ஒரு படி மேலே போய் கடும் அனல் கக்கியுள்ளார் மஸ்க். டிரம்ப் 2024 தேர்தலில் வெற்றிபெற தான் காரணம். நான் இல்லையென்றால், டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார். ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையை கட்டுப்படுத்துவார்கள், குடியரசுக் கட்சியினர் செனட்டில் 51-49 ஆக இருப்பார்கள் என்று கூறியுள்ளார் மஸ்க்.
டிரம்ப், மஸ்க்கின் சண்டை எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை. ஆனால் சமீப காலமாக டிரம்ப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் கடும் விமர்சனத்தைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}