கலிபோர்னியா: எனது மனசு புயல் மாதிரி. எப்பவும் அலையடித்துக் கொண்டே இருக்கும். அதை சமாளிக்க நான் நாடுவது வீடியோ கேம்ஸ் என்று கூறியுள்ளார் டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்.
உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவன அதிபர். அதுபோக டிவிட்டர் உரிமையாளரும் கூட. மேலும் நிறைய பிசினஸ்களில் ஈடுபட்டிருப்பவர். எப்போதும் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து வரும் எலான் மஸ்க் தன்னைப் பற்றிய தனிப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் லெக் பிரைட்மேன் என்ற தொலைக்காட்சி செய்தியாளருக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது மனசு ஒரு புயல் மாதிரி. எப்பவும் அது இருந்துட்டே இருக்கும். அலையடிச்சுட்டே இருக்கும். அதுபோன்ற சமயங்களில் மனதை அமைதிப்படுத்த நான் நாடுவது வீடியோ கேம்ஸ்தான். வீடியோ கேம்ஸ் விளையாடும்போது அதில் லயித்துப் போய் எனது சிந்தனைகளும், மனசும் அமைதியாகி விடும். ஒருநிலைப்படும். புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பும் கிடைக்கும்.
நான் நிறைய வீடியோ கேம்ஸ் விளையாடியுள்ளேன். உண்மையில் அதுதான் எனது மிகப் பெரிய பொழுதுபோக்கும் கூட.
நிறையப் பேருக்கு என்னைப் பிடி்காது. காரணம் அவர்களுக்கு எனது மனது புரிவதில்லை. புரியும்படி நானும் நடந்து கொள்வதில்லை. புரியாதவர்களுக்கு எப்படி நம்மளைப் பிடிக்கும் என்றார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க்குக்குப் பிடித்த ஒரு வீடியோ கேம்ஸின் பெயர் தி பேட்டில் ஆப் பாலிடோப்பியா. அது ஒரு நாகரீகம் குறித்த வீடியோ விளையாட்டு ஆகும். போர் விளையாட்டும் கூட. அதைத்தான் ரொம்ப விரும்பி ஈடுபடுவாராம் எலான் மஸ்க். இதை அவரது மனைவி கிரிம்ஸ் கூறியுள்ளார்.
ஒரு நாள் இரவு எல்டன் ரிங் என்ற வீடியோ கேம்ஸ் ஆட உட்கார்ந்துள்ளார் எலான் மஸ்க். அது அடுத்த நாள் காலை 5 மணி வரை நீடித்துள்ளது. அன்றுதான் அவர் டிவிட்டரை வாங்கும் முடிவை எடுத்தாராம். அந்த விளையாட்டுதான் அவருக்கு டிவிட்டரை வாங்கும் முடிவுக்கு உந்தித் தள்ளியதாக எலான் மஸ்க் பின்னர் கிரிம்ஸிடம் தெரிவித்தாராம்.
ரைட்டு தல!
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}