டெல்லி: பிரதமர் மோடிக்கு, நம்ம எலான் மஸ்க் வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வருவதாக திட்டமிட்டிருந்த அவர் கடைசி நேரத்தில் அதை தள்ளி வைத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனம், டிவிட்டர் உள்ளிட்டவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க், இந்தியாவில் தனது டெஸ்லா தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டு வருகிறார். இதுதொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்துள்ளன. இந்த ஆலையை எங்கு அமைப்பது என்பதில்தான் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் டெல்லி வருவதாக இருந்தது. அந்த சமயத்தில் டெஸ்லா ஆலையை தொடங்குவது தொடர்பான அறிவிப்பும், ஒப்பந்தமும் வெளியாகும் என்றும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. இது தேர்தலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஜக தரப்பும் எதிர்பார்த்தது. ஆனால் திடீர் திருப்பமாக கடைசி நேரத்தில் தனது பயணத்தை தள்ளி வைப்பதாக அறிவித்து விட்டார் எலான் மஸ்க்.
ஆனால், இந்தியா பயணத்தை தள்ளி வைப்பதாக அறிவித்த அவர் சீனாவுக்கு வந்து சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி வெற்றி அடைய மாட்டார், எனவே புதிய ஆட்சி அமைந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று அவருக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் கூறின. இந்த நிலையில், தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு, எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள். இந்தியாவில் எனது நிறுவனங்கள் அற்புதமான பணியாற்றும் சூழலை எதிர்நோக்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தியின் மூலம் இந்தியாவில் தனது ஆலையை நிர்மானிக்கும் விருப்பத்தை சுட்டிக் காட்டியுள்ளார் மஸ்க். இதனால் விரைவில் அவர் இந்தியாவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் தனது ஆலையை இந்தியாவில் அமைத்தால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஆலை எங்கு அமையப் போகிறது என்று தெரியவில்லை. குஜராத்தில் அமைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படாத தகவல். குஜராத் அல்லது உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆலை அமையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால் சந்திரபாபு நாயுடு மூலம் இந்த ஆலையை ஆந்திரா பக்கம் கொண்டு செல்லும் வாய்ப்புகளும் உள்ளன.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}