டிவிட்டர் ஊழியர்கள் டிஸ்மிஸ் தொடர்கிறது.. வாக்குறுதியை மீறினார் எலான் மஸ்க்

Feb 23, 2023,01:49 PM IST
கலிபோர்னியா: டிவிட்டரில் இனி ஆட்குறைப்பு இருக்காது என்று கூறியிருந்தார் எலான் மஸ்க். ஆனால் தற்போது வரை ஆட்குறைப்பு அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறதாம்.



டிவிட்டரை தற்போது எலான் மஸ்க்தான் வைத்துள்ளார். அவர் வசம் வந்ததும் டிவிட்டரின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக பார்க்கப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த நவம்பர் மாதம் யாரும்  எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கானோரை அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார் எலான் மஸ்க்.


கிட்டத்தட்ட மூன்றில் 2 மடங்கு ஊழியர்களை அவர் அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார். அதன் பின்னர் மீண்டும் ஆட்குறைப்பு இருக்காது.. மாறாக ஊழியர்களை சேர்க்கப் போகிறோம் என்று கூறியிருந்தார் எலான் மஸ்க். விளம்பரம் மற்றும் என்ஜீனியரிங் பிரிவில் தகுதியானவர்கள் கிடைத்தால் நீங்கள் பரிந்துரைக்கலாம் என்று கூட தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் மஸ்க்.

ஆனால் டிவிட்டரில் இன்னும் ஆட்குறைப்பு நின்றபாடில்லையாம். அவ்வப்போது சிலரை நீக்கிக் கொண்டுதான் உள்ளனராம். கடந்த வாரம் கூட 12 பேர் வரை நீக்கப்பட்டார்களாம். அதில் ஒருவர் நேரடியாக மஸ்க்குக்கே ரிப்போர்ட் செய்யும் அதிகாரி ஆவார். அவர் டிவிட்டரின் விளம்பர வர்த்தகப் பிரில் முக்கியப் பொறுப்பில் இருந்தவராம்.

சமீபத்தில்தான் இந்தியாவில் இருந்த 3 அலுவலகங்களில் இரண்டை மூட உத்தரவிட்டார் மஸ்க். அதில் வேலை பார்த்து வந்த ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  இதையடுத்து டெல்லி மற்றும் மும்பையில் இருந்த டிவிட்டர் அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டன. கடந்த நவம்பர் மாத ஊழியர்கள் நீக்கத்தின்போது இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். இது இந்தியாவில் உள்ள டிவிட்டர் பணியாளர்களில் 90 சதவீதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்