சான்பிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் தளத்தை, தன்னுடைய எக்ஸ்ஏஐ நிறுவனத்திற்கு விற்று விட்டார். 33 பில்லியன் டாலர் மதிப்புக்கு இந்த பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். மேலும் இரு நிறுவனங்களும் இனி இணைந்து செயல்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளம் இனி செயற்கை நுன்னறிவுத் தொழில்நுட்பத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக மாறும். மிகப் பெரிய வளர்ச்சியையும் அது காணும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளம் முன்பி டிவிட்டர் என்று அழைக்கப்பட்டது. அதை எலான் மஸ்க் வாங்கி எக்ஸ் என்று பெயர் மாற்றினார். எக்ஸ் தளத்தில் தற்போது 600 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். உலகின் முன்னணி சமூக வலைதளமாக இது திகழ்கிறது. இந்த நிலையில்தான் இதை வேறு லெவலில் வளர்க்க வேண்டும் என்பதற்காக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எக்ஸ் ஏஐ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார் எலான் மஸ்க்.

எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ ஆகியவை இணைந்து புதிய பாதையில் நடை போடும். இனி இது வெறும் சமூக வலைதளமாக மட்டும் இல்லாமல், மனித குல முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கக் கூடியதாக இருக்கும் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.
மேலும் இந்த விற்பனையின் மூலமாக இரு நிறுவனங்களையும் இணைத்துள்ளார் எலான் மஸ்க். இதில் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் மதிப்பு 80 பில்லியன் டாலராகவும், எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 33 பில்லியன் டாலராகவும் இருக்கும்.
கடந்த 2022ம் ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் எலான் மஸ்க் என்பது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்துதான் அவர் எக்ஸ்ஏஐ நிறுவனத்தை அடுத்த ஆண்டு தொடங்கினார். அடுத்தடுத்து பல மாற்றங்களையும் அவர் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் எக்ஸ் தளத்தில் அவர் அறிமுகப்படுத்திய க்ரோக் பெரிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. சாட் ஜிபிடி, டீப்சீக் ஆகியவற்றுக்கு போட்டியாக இது மாறி வருகிறது. எக்ஸ் தளத்தில் க்ரோக் படும் பாட்டைப் பார்த்தாலே இது தெரியும்.
இதில் என்ன வேடிக்கை என்றால் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுதான் கடந்த 2015ம் ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்தை உருவாக்கினர். இதுதான் சாட் ஜிபிடியை உருவாக்கியது. இப்போது தான் உருவாக்கிய சாட் ஜிபிடிக்குப் போட்டியாக க்ரோக்கை களம் இறக்கி விட்டுள்ளார் எலான் மஸ்க்.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}