சென்னை: சென்னை வேளச்சேரி முதல் கடற்கரை வரையிலான எம்ஆர்டிஎஸ் ரயில் சேவை (மாடி ரயில்) நாளை முதல் மீண்டும் வழக்கம் போல இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை வேளச்சேரி முதல் கடற்கரை வரை இந்த மாடி ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரை முதல் எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் மாடி ரயில் சேவை வேளச்சேரி முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது நான்காவது வழித்தடப் பணிகள் முடிவுற்றிருப்பதால் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான மாடி ரயில் சேவைகள் வழக்கம் போல இயக்கப்படவுள்ளன.
நாளை முதல் இந்த ரயில் சேவை மீண்டும் வழக்கம் போல செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் மாடி ரயில் சேவையால் பலனடைந்து வரும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறு மார்க்கத்தில் அதேபோல 45 ரயில்களும் என மொத்தம் 90 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கடற்கரையிலிருந்து முதல் ரயில் காலை 4.53 மணிக்கும், வேளச்சேரியிலிருந்து முதல் ரயில் காலை 4 மணிக்கும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாடி ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு பெரும் அசவுகரியமாக இருந்து வந்தது. அதைத் தாண்டி போக வேண்டியவர்கள் சிரமப்பட்டு வந்தனர். தற்போது மாடி ரயில் மீண்டும் ஓடப் போவதால் மக்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் முடிவுக்கு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}