சென்னை: ஒவ்வொரு கனவின் வலியும் கண்ணில் தெரியும் என்பார்கள்.. பாபுவும் அப்படித்தான்... பரிதாபமாக மரணித்துப் போயிருக்கிறார் என் உயிர்த் தோழன் பாபு.
இயக்குநர் பாரதிராஜாவின் என் உயிர் தோழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாபு. கடந்த 30 வருடமாக படுத்த படுக்கையாக இருந்து வந்த பாபு தற்போது மரணத்தைத் தழுவியுள்ளார்.
மிகப் பெரும் சினிமாக் கனவுடன் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாபு. என் உயிர்த் தோழன் படத்தில் அவர் மெட்ராஸ் பாஷை பேசி படு இயல்பான நடிப்பை அளித்து அசத்தியிருந்தார். அந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. அடுத்தடுத்து அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு என அவர் நடித்த படங்களில் அவர் பேசப்பட்டார்.
அடுத்து அவர் நடித்த மனசார வாழ்த்துங்களேன் படம் அவரது வாழ்க்கையை முடக்கிப் போட்டு விட்டது. இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது அவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. நடமாட முடியாத நிலைக்குப் போய் விட்டார் பாபு. அன்று முதல் அவர் கடந்த 30 வருடமாக படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார்.
படுக்கையில் கிடந்தபடி தனது கனவுகள் எல்லாம் நொறுங்கிப் போனதை எண்ணி எண்ணி வேதனைப்பட்டு வந்த அவருக்கு, தான் மறுபடியும் நடமாடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அது கடைசி வரை பலிக்காமலேயே போய் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டுப் போய் விட்டார் பாபு.
பாபுவின் கண்கள் மிகவும் பவர்புல்லாக இருக்கும். அத்தனை உணர்வுகளையும் அதில் அழகாக காட்டுவார் பாபு. அந்தக் கண்களை இப்போது பார்த்தாலும் கூட அவரது தேங்கிப் போன கனவுகளை பார்க்க முடியும்.. மீண்டும் பிறந்து வாங்க பாபு.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}