வண்டலூர் உயிரியல் பூங்காவில்.. நுழைவுக் கட்டண உயர்வு!

Sep 05, 2023,11:49 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள, சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகிய நான்கு உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வண்டலூர் உயிரியல் பூங்கா  நுழைவு கட்டணம்:



தற்போது தமிழகத்தில் நான்கு உயிரியல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் ,வளர்ச்சி பணிக்காகவும் உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக தற்போது உள்ள ரூ. 115 என்பது, ரூ. 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பேட்டரி வாகன கட்டணம் ரூபாய் 100 லிருந்து 150 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி இலவசம் என்பது தொடரும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கும் , அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக ரூ. 20 மட்டும் வசூலிக்கப்படும்.

வீடியோ மற்றும் கேமரா போன்றவற்றின் ஒளிப்பதிவு கட்டணமாக ரூபாய் 500 லிருந்து 750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சக்கர நாற்காலி கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது இதனை அடித்து வாகன கட்டணங்கள் மணிக்கணக்கில் இருந்த பார்வை நேரம் நாள் கணக்கில் மாற்றப்பட்டுள்ளது.

கிண்டி சிறுவர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம்:

கிண்டி சிறுவர் பூங்காவின் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 60 ஆகவும், சிறியவர்களுக்கு 5 முதல் 12 வயது வரை ரூபாய் 10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமராவிற்கு ரூபாய் 200 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சேலம்  குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம்:

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவின் நுழைவு கட்டணம்  பெரியவர்களுக்கு ரூபாய் 50 ஆகவும், சிறியவர்களுக்கு 5 முதல் 12 வயது வரை ரூபாய் 10 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமராவிற்கு ரூபாய் 150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம்:

வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம்,  பெரியவர்களுக்கு ரூபாய் 30 ம், சிறியவர்களுக்கு ரூபாய் 10 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இனி ஜில் ஜில் கிளைமேட் தான்.. தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்குமாம்.. வானிலை மையம் கணிப்பு..!

news

பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. நாளை மறுநாள் வெளியாகிறது.. ஆர்வத்தில் மாணவர்கள்!

news

IPL 2026.. CSKவில் யாருக்கெல்லாம் கெட் அவுட்.. யாரெல்லாம் நீடிப்பாங்க?.. A quick analysis!

news

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்..‌ நாளை போர்க்கால ஒத்திகை.. மத்திய அரசு அறிவிப்பு!

news

இந்தியாவுடன் மோதல் போக்கு.. பாகிஸ்தான் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.. மூடிஸ் எச்சரிக்கை

news

நுங்கு சாப்பிடலையோ நுங்கு.. வந்தாச்சு சீசன்.. வாங்கி சாப்பிட்டு ஜில்லுன்னு இருங்க!

news

இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. தொழிற்கல்வி இயக்குனரகம்!

news

தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களில்.. டமால் டுமீலுடன் மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

news

கொளுத்தும் கோடை காலத்தில்.. உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள என்ன குடிக்கலாம்..?

அதிகம் பார்க்கும் செய்திகள்