கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடுப்பாடி பழனிச்சாமி இன்று தனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவங்கினார்.
கோவை சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட தேக்கம்பட்டியில் உள்ள வன பத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, அங்கிருந்து தனது பிரச்சார பயணத்தை அவர் துவங்கினார். தனக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பச்சை நிற வாகனத்தில், இசட் பிளஸ் பாதுகாப்புடன், "மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் அவர் பிரச்சார பயணத்தை துவங்கினார்.

தேக்கம்பட்டியில் தனியார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் உடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். அப்போது அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்கள் அனைவரின் மனம் குளிரும் வகையில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இதனால் கொங்கு மண்டலத்தில் இந்த முறையும் தேர்தல் பிரச்சாரத்தின் போது அத்திக்கடவு அவிநாசி திட்டம் விவகாரம் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போல் தனது சுற்றுப் பயணத்தில் வேறு என்னென்ன வாக்குதிகள் அதிமுக தரப்பில் இருந்து வழங்கப்பட உள்ளது என்பதை தெரிந்து கொள்ள மக்களும், அரசியல் கட்சிகளும் ஆர்வமாக உள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}