- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ வீரமணிகண்டன்
கணிதத்தில் ராணியாக செயல்படுவது எப்படி என்று பார்ப்போம்.
கணிதம் அறிவியலின் ராணி, எண் கணிதம் கணிதத்தின் ராணி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்படி சிறப்பு வாய்ந்து இன்றைய நாளை கொண்டாடுவோமா?
International Day of Mathematics (சர்வதேச கணித தினம்)
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14 அன்று உலகம் முழுவதும் சர்வதேச கணித தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சிறப்பாக கொண்டாட UNESCO நிறுவனம் அறிவித்துள்ளது. கணிதத்தின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு உணர்த்துவதற்கு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

கணிதம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையாக செயல்படுகிறது. மாணவர்களுக்கு கணிதத்தில் ஆர்வம் ஏற்படுத்துவதற்காகவும், கணிதம் வாழ்க்கையின் பல துறைகளில் பயன்படுவதாலும் அனைவரும் கணிதத்தை விரும்பி கற்க வேண்டும் என்பதற்கு எளிய முறைகளில் கணிதம் கற்பிக்கப்படுகிறது .
கணிதம் இல்லாமல் அறிவியல் வளர்ச்சி சாத்தியமில்லை. பள்ளிகளில் கணித போட்டிகள் நடத்தப்படுகின்றன. கணித விளையாட்டுகள் மற்றும் புதிர்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் கணிதத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் “பை தினம்” என்றும் அழைக்கப்படுகிறது. π மதிப்பு 3.14 என்பதால் மார்ச் 14 தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. கணிதம் சிந்தனை திறனை வளர்க்க பெரிதும் உதவுகிறது. கணிதம் பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. கணிதம் ஒவ்வொரு மனிதனின் அறிவை கூர்மையாக்குகிறது. கணித அறிஞர்களை நினைவுகூரும் நாளாக கொண்டாடப்படுகிறது.
கணிதத்தை புரிந்து போடுபவர்கள் பல துறைகளில் சிறப்பாக செயல்படுவதை நாம் பார்க்க முடிகிறது. குழந்தை பருவத்திலேயே கணிதத்தை புரிந்து போட சொல்லி பழக வேண்டும். ஒவ்வொரு மாணவரும் கணிதத்தை மனப்பாடம் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கணிதத்தை தாமாக சிந்தித்து போட முயற்சி செய்ய வேண்டும். மனக்கணக்குகள் போட முயற்சி செய்து பழக வேண்டும்.
அடிப்படை கணிதத்தை தாமாக போட்டு பார்க்க வேண்டும். அதிகமாக கால்குலேட்டர் மற்றும் கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கணிதத்தில் உள்ள ஒவ்வொரு தலைப்பையும் புரிந்து படித்து வீட்டில் உள்ள பொருட்களை ஒப்பிட்டு பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் . புதிர் கணக்குகள், சுடோக்கு போன்ற சிந்திக்கும் கணக்குகளை அடிக்கடி போட்டு பார்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கணிதத்தை கற்கண்டாக கற்றுக் கொடுப்போம். கணிதத்தின் சிறப்பை உணர செய்வோம்.
(வீ.யோகாஸ்ரீ, அஞ்சல் அட்டையில் 1330 திருக்குறளை எழுதி முப்பால் விருது பெற்றுள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் 2025 முப்பெரும் விழாவில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார். கலைத் திருவிழாவில் மாறுவேடம் மற்றும் தனிநபர் நடிப்பில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பேச்சுப் போட்டியில் சுதந்திரா சொற்சுடர் விருது பெற்றுள்ளார் . தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் 3 முறை உலக சாதனை செய்துள்ளார்)
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}