ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் மற்றும் டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தபோது, மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கி 17ஆம் தேதியுடன் நிறைவடைந்து. பின்னர் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18- ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட மொத்தம் 48 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அதே சமயத்தில் முன்னணி கட்சிகளான அதிமுக, தேமுதிக, பாஜக தவெக, உள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தலை புறக்கணித்துள்ளன .
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடந்துள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி முழுவதும் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் ஒரு பக்கம் திமுகவினரும், மறுபக்கம் நாம் தமிழர் கட்சியினரும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் இறங்கினர். இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தொகுதியில் தங்கியுள்ள பிற ஊர்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி சட்டசபைத் தேர்தல்
இதேபோல டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரமும் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கும் பிப்ரவரி 5ம் தேதிதான் தேர்தல் நடைபெறுகிறது. அங்கும் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
டெல்லியைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. 3வது கட்சியாக காங்கிரஸும் களத்தில் உள்ளது. டெல்லி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக தரப்பில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அன்பே வா! எந்தன் அருகே வா!
பரமானந்தம்!
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!
Subhalakshmi on her Drawings: ஓவியமும் நானும்!
அவன் அப்படிதான்!
If you obey all the rules, you miss all the fun
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
{{comments.comment}}