சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 2021ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவேரா வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இவர் மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். ஆனால் திருமகன் ஈவேரா திடீர் மரணமடையவே, கடந்த 2023ம் ஆண்டு அங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அங்கு மீண்டும் இடைத் தேர்தல் வந்துள்ளது. இடைத் தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லி சட்டசபைத் தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: ஜனவரி 10
மனுத் தாக்கலுக்கு கடைசி நாள்: ஜனவரி 17
மனுக்கள் பரிசீலனை: ஜனவரி 18
மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஜனவரி 20
தேர்தல் நாள் : பிப்ரவரி 5
வாக்கு எண்ணிக்கை: பிப்ரவரி 8
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}