ஒரு நாள் தெனாலிராமன் வீற்றிருந்த விக்கிரமாதித்தனின் அவையைப் போன்ற புகழ்பெற்ற ஓர் அரசவையில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. மன்னர், பண்டிதர்கள், குருஜி மற்றும் பல்வேறு வீரர்களும் அவையில் வீற்றிருந்தனர்.
அப்போது காவலன் வந்து, "அரசே! உஜ்ஜையினி தேசத்தில் இருந்து ஒரு தூதுவர் வந்திருக்கிறார்" என்று கூறினான்.
தூதுவன் உள்ளே நுழைந்து வணங்கி, "மன்னரே, உஜ்ஜையினி அரசர் உங்கள் ஆட்சியையும், உங்கள் நாட்டின் அறிஞர்களின் புத்தி கூர்மையையும் மிகவும் கேள்விப்பட்டு என்னை அனுப்பி வைத்தார். இங்குள்ள அறிஞர்களில் சிறந்தவரை என்னோடு கையோடு அழைத்து வரச் சொன்னார்" என்றான்.
அதற்கு மன்னர், "அப்படி யாரையும் சும்மா அனுப்பிவிட முடியாது. நீ ஒரு கேள்வி கேள். அதற்கு எங்களிடம் சரியான பதில் இல்லை என்றால், நீ யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்" என்றார்.
தூதுவரும் ஒப்புக்கொண்டு, "அரசே, இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த பூ எது? சொல்லுங்கள் பார்ப்போம்!" என்று கேட்டார்.

அவையில் இருந்த அனைவரும் யோசிக்கத் தொடங்கினார்கள். இரு சிஷ்யர்கள் அங்கிருந்த பெரிய குருஜியிடம் சென்று, "ஐயா, உலகத்திலேயே பெரிய புத்திசாலி நீங்கள்தான்! எங்களது அரசையும் மானத்தையும் காப்பாற்றுங்கள்" என்று நகைச்சுவையாகக் கேட்டுக்கொண்டனர்.
குருஜி சற்று யோசித்து, "இறைவனுக்குப் படைக்கப்படும் புனிதமான தாமரைப்பூ தான் சிறந்தது" என்றார். ஆனால், வந்த தூதுவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை, "இது சரியான பதில் இல்லை" என்றார்.
அடுத்ததாக ஒரு புலவர் எழுந்து, "மணமும் அழகும் நிறைந்த ரோஜாப்பூ தான் சிறந்தது" என்றார். அவையில் இருந்தவர்கள் சிரிக்கத் தொடங்கினர். மற்றொருவர் சூரியகாந்திப் பூ என்றார். இவ்வாறாகப் பலரும் ஆளாளுக்கு ஒரு பூவைக் கூற, அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
உடனே பெரிய குருஜி, "எல்லோரும் அமைதியாக இருங்கள்!" என்று கூறிவிட்டு, மன்னரை நோக்கி, "மன்னரே, நமது பண்டிதர் ராமகிருஷ்ணனிடம் கேட்போம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்" என்றார்.
ராமகிருஷ்ணன் (தெனாலிராமன்) ஒரு நிமிடம் திகைத்தார், யோசித்தார். பிறகு புன்னகையுடன் மன்னரை நோக்கி, "அரசே! உலகத்திலேயே மிகச் சிறந்த பூ நாம் அனைவரும் தினமும் உடலில் அணிந்திருக்கும் பருத்திப் பூ (பருத்தி ஆடை) தான்!" என்றார்.
அவையில் இருந்த அனைவரும் வியந்தனர்!
ராமகிருஷ்ணன் தொடர்ந்தார்: "குருமார்கள், அரசர்கள், வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் மானத்தைக் காக்கவும், உடலை மறைக்கவும், அழகைக் கூட்டவும் பயன்படுவது பருத்திப் பூவினால் நெய்யப்பட்ட ஆடைகளே! இறைவனால் படைக்கப்பட்ட அந்தப் பூவே மனிதனின் மானத்தைக் காக்கிறது" என்றார்.
இதைக்கேட்ட உஜ்ஜையினி தூதுவரும், "ஆம்! மானத்தைக் காக்கும் பருத்திப் பூவே உலகத்தில் சிறந்தது!" என ஒப்புக்கொண்டார். அவையே ராமகிருஷ்ணனின் புத்தி கூர்மையைப் பாராட்டி வியந்தது.
இதில் இன்னொரு கதையும் இருக்கிறது. உலகத்திலேயே சிறந்த பூ எதுவென்றால், கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷம் அது. மனிதனைத் தவிர எந்த விலங்குகளுக்கோ, பறவைகளுக்கோ, பூச்சிகளுக்கோ, புழுக்களுக்கோ, செடிகளுக்கோ, மலைகளுக்கோ, நதிகளுக்கோ அல்லது வேறு யாருக்குமே கிடைக்காத கடவுளின் அற்புதப் படைப்புதான் 'புன்னகை பூ'.
ஆனால், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் இதை அனைவரும் மறந்துவிட்டார்கள். காசு கொடுத்து சிரிக்கத் தெரிந்து கொண்ட மனிதன், தன் சொந்த உறவுகளிடமும், நண்பர்களிடமும், அப்பா-அம்மாவிடமும், கணவன்-மனைவியிடமும் சிரிக்க மறந்துவிட்டான். மொபைல் போன் மூலமாகவும், சினிமா ஹீரோக்களின் நகைச்சுவை மூலமாகவும், மற்றவர்களைக் கேவலப்படுத்திச் சிரிப்பதையுமே சிரிப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில், இன்றைய உலகத்திற்குப் புன்னகை பூ என்பதும் சிரிப்பு என்பதும் ஒரு 'மத்தாப்பு'. இந்தச் சிரிப்பை மறப்பவர்கள் மனநிலையிலும் உடல்நிலையிலும் பாதிக்கப்பட்டு, பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
எனவே, இந்த அழகான புன்னகையை இன்றிலிருந்தே அனைவரும் பரப்பத் தொடங்குவோம்! ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு முறையாவது, ஒரு மணி நேரமாவது சந்தோஷமாக வாழக் கற்றுக்கொள்வோம். இதுவே என்னுடைய கருத்து.
(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
உலகத்தில் சிறந்த பூ எது?
பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
{{comments.comment}}