மும்பை: எல்லோரும் என்னை ஒரு மகள் போல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் என் அம்மா மீது அவர்கள் வைத்துள்ள பாசமும், அன்பும், மரியாதையும் என்று நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
சினிமா வரலாற்றில் தனக்கென்று தனியிடம் உருவாக்கியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து பின்னர் படிப்படியாக தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து அப்படியே இந்திக்குப் போனவர் ஸ்ரீதேவி. இந்தியில் அவர் நடிக்க ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இந்தியா முழுவதையும் வசீகரித்தவர்.
இவரது மகள் தான் ஜான்வி கபூர். தற்போது இவரும் படங்களில் நடித்து வருகிறார். இவர் 2018ல் தடாக் படத்தின் மூலம் சினிமா உலகில் கால் எடுத்து வைத்தவர். இந்தியில் நடித்துள்ள இவர் தேவரா என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிக்கிறார். இதனை தொடர்ந்து தமிழில் சிம்புவுடன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், மும்பையில் பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜான்வி கபூர் பேசுகையில், " என்னை பார்க்கும் எல்லோரும் உன் அம்மா ஸ்ரீதேவி மாதிரி அழகாக இருக்கிறாய். அவரது சாயலுடன் பிறந்து இருக்கிறாய் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் நியூ ஜெனரேஷன் ஸ்ரீதேவி என்று சொல்லுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
தெலுங்கில் தேவரா படப்பிடிப்பில் எல்லோரும் என்னை ஒரு மகள் போல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் என் அம்மா மீது அவர்கள் வைத்துள்ள கவுரவம் தான். எனது அம்மா நீண்ட காலம் முன்னணி நடிகையாக இருந்தவர். அவரது மகள் என்பதால் என்மீது எல்லோரும் காட்டும் பாசம் என்னை மெய்மறக்க செய்கிறது என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}