டெல்லி: நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்தும் இணைந்து உருவாக்கிய, பெரும் பரபரப்பையும், பாஜகவுக்கு படபடப்பையும் ஏற்படுத்திய இந்தியா கூட்டணிக்கு பெரிய அளவில் சீட் கிடைக்காது என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எனப்படும் எக்சிட் போல் முடிவுகளை நேற்று பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டன. இந்த முடிவுகளை இந்தியா கூட்டணிக் கட்சிகள் நிராகரித்துள்ளன. அதேசமயம், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் வரவேற்றுள்ளன.
இவை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இந்தக் கருத்துக் கணிப்புகள் உணர்த்தும் ஒரு விஷயத்தை நிராகரித்து விட முடியாது. அது அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 350க்கும் மேல் சீட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் கூறியுள்ளனர். தேசபந்து நாளிதழ் மட்டுமே இந்தியா கூட்டணி வெல்லும் என்று கணித்துள்ளது.
அதிர வைக்கும் Exit poll results.. அதிமுக மேலும் பலவீனமாகி விட்டதா?
பலமுடன் இருக்கும் பாஜக:
பெரும்பாலும் எக்சிட் போல் கணிப்புகள் அப்படியே பலிப்பதில்லை. நிச்சயம் முன்னுக்குப் பின் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு டிரெண்டை நம்மால் ஊகிக்க முடியும்.. அந்த வகையில் பார்த்தால் இந்த தேர்தலிலும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. மொத்த நம்பர் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாஜகவே தனி்ப பெரும் கட்சியாக அல்லது தனிப் பெரும்பான்மையுடன் கூடிய கட்சியாக வர வாய்ப்புள்ளதாக ஊகிக்க முடியும்.
தனிப் பெரும் கட்சியாக யார் வந்தாலும் அந்தக் கட்சியைத்தான் குடியரசுத் தலைவர் ஆட்சியமைக்க முதலில் அழைப்பார். அதுதான் மரபும் கூட. அப்படிப் பார்த்தால் பாஜக தனிப் பெரும்பான்மை பலம் பெறத் தவறி, அதேசமயம், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தால் அந்தக் கட்சிக்கே முதலில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படும். அப்படி நேரும் பட்சத்தில் பல கட்சிகளை பாஜக உடைக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. கடந்த காலங்களில் இதை நாம் நிறையவே பார்த்துள்ளோம். எனவே தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தால் இது நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
மோடி அலை ஓயவில்லை?
இந்த பிரச்சாரக் களத்தில் பிரதமர் மோடியின் பங்கு முக்கியமானது. நாடு முழுவதும் அவர் அனல் பறக்க சுற்றுப் பயணம் செய்தார். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். தமிழ்நாட்டில் அதிக முறை பிரச்சாரம் செய்தார். தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பற்று உள்ளவறாக வெளிப்படுத்திக் கொண்டார். இது தமிழ்நாட்டில் பாஜகவினரை தீவிரமாக பணியாற்ற செய்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய டிவி பேட்டிகள், அவரது பிரச்சாரக் கூட்ட பேச்சுக்கள், அவர் கிளப்பிய சர்ச்சைகள் உள்ளிட்டவை பாஜகவுக்கு சாதகமாக மாறியிருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்துக்கள் - முஸ்லீம்கள் குறித்த அவரது பேச்சுக்கள் பாஜகவுக்கு நன்மையே கொடுத்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
காங்கிரஸுக்கு என்னாச்சு
மறுபக்கம் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறையை விட இந்த முறை கூடுதலான இடங்கள் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தும் கூட பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் இன்னும் உருவெடுக்கவில்லை என்பதையும் இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது. அதாவது பாஜகவை அசைத்துப் பார்க்கும் சக்தியாக மீண்டும் காங்கிரஸ் மாறவில்லை. அதேபோல இந்தியா கூட்டணியும் கூட பாஜகவை நிலை குலைய வைக்கும் அளவிலான பலத்தை பெறவில்லை என்பதையும் ஊகிக்க முடிகிறது.
அதேபோல தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலுமே பாஜகவுக்கு சில இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக எல்லா கருத்துக் கணிப்புகளும் கூறியுள்ளன. இதுவும் கவனத்தில் கொள்ளத்தக்கது. பிரதமர் மோடி அளித்த பல்வேறு பேட்டிகளிலும், இந்த முறை நாங்கள் தெற்கிலும் வெல்வோம் என்று கூறி வந்தார். அதை இது பிரதிபலிப்பதாக உள்ளது.
இந்தியா கூட்டணி பலமடைய வேண்டும்
இந்தக் கருத்துக் கணிப்புகள் முக்கியமான ஒரு விஷயத்தைப் பிரதிபலிக்கின்றன. பாஜக இன்னும் பலமாகவே உள்ளது, வலுவாகவே உள்ளது. அதை எதிர்க்கவும், தகர்க்கவும், இப்போது உள்ள இந்தியா கூட்டணி போதாது.. மாறாக மிச்சம் உள்ள சக்திகளையும் இணைத்து கூட்டணியை மேலும் பலமாக்கி ஒரே முனைத் தாக்குதலாக மோத வேண்டும்.. அத்தோடு எங்கெல்லாம் மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாமல் போனதோ அங்கெல்லாம் அதை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் உள்ளன.
இந்தக் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவிடமிருந்து வந்தவை. அதைத்தான் அத்தனை டிவிகளும் ஒளிபரப்பியுள்ளன. உண்மையான முடிவு ஜூன் 4ம் தேதிதான் தெரியும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கூறி வருகின்றனர். அதில் ஒரு விஷயத்தை புறம் தள்ள முடியாது.. அதாவது உண்மையான முடிவுகள் வரும்போதுதான் நிஜமாக யார் வென்றது என்பதை அறிய முடியும் என்பதே அது. எனவே ஜூன் 4ம் தேதி வரை காத்திருந்தால்தான் உண்மையான முடிவை நாம் அறிய முடியும்.
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}