அதிர வைக்கும் Exit poll results.. சிங்கிள் டிஜிட்தானா.. அதிமுக மேலும் பலவீனமாகி விட்டதா?

Jun 02, 2024,05:58 PM IST

சென்னை : லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் ஜூன் 04ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பல்வேறு மீடியாக்கள் வெளியிட்டுள்ளன. இதில் அதிமுகவுக்கு 2 முதல் 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது அக்கட்சியினரை கவலைக்குள்ளாக்கியுள்ளது.


2019 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக, தேசிய ஆளும் கட்சியான பாஜக.,வுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் 40 இடங்களில் போட்டியிட்ட பாஜக-அதிமுக கூட்டணி வெறும் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்றது. அதுவும் அதிமுக.,வின் ஓபி ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்று, எம்.பி., ஆனார். ஆனால் இந்த முறை அதிமுக தனி கூட்டணி அமைத்தும், பாஜக தனி கூட்டணி அமைத்தும் போட்டியிட்டுள்ளன. 




நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் கருத்து கணிப்புகள் பலவற்றிலும், பிரதான எதிர்கட்சியான அதிமுக.,விற்கு 2 முதல் 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதிகபட்சம் 5 சீட் வரை மட்டுமே தந்துள்ளனர். அதே சமயம், கடந்த தேர்தலில் நோட்டாவை விட குறைவான ஓட்டுக்களை பெற்ற பாஜக.,விற்கு 3 முதல் 5 இடங்கள் வரை கிடைக்கும் என சொல்லப்படுகிறது. மற்றொரு புறம் ஆளும் கட்சியான திமுக கூட்டணிக்கு 36 முதல் 39 இடங்கள் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த முறை திமுக கூட்டணிக்கு 38 இடங்கள் கிடைத்தது. அதனால் இந்த முறையும் அதிக இடங்கள் கிடைக்கும் என்று சொல்லுவது ஒன்றும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் கிடையாது.


அதே சமயம், லோக்சபா தேர்தலில் மக்களுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது இருக்கும் அதிருப்தி வெளிப்படும். இதையே அடித்தளமாக வைத்தும் 2026 ல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கும் அதிமுக.,விற்கு இவ்வளவு குறைவான இடங்கள் தான் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக.,வுடன் கூட்டணி வைத்தது தான் கடந்த தேர்தலில் அதிமுக.,விற்கு ஒரே ஒரு இடம் மட்டும் கிடைத்ததற்கு காரணம் என சொல்லப்பட்டது. அப்படி பார்த்தால் இந்த முறை பாஜக., வை எதிர்த்து போட்டியிட்டதால் அதிமுக.,விற்கு அதிக இடங்கள் தான் கிடைக்க வேண்டும். ஆனால் பாஜக.,வை விடவும் குறைவான இடங்கள் மட்டுமே கிடைக்கும் என சொல்லப்படுகிறது.


பாஜகவுக்கு மாற்று உருவாகவில்லையா.. Exit Polls உணர்த்துவது என்ன?


பாஜக கூட்டணியில் இந்த முறை ஓபிஎஸ் இணைந்துள்ளதும் இந்த தேர்தலில் பாஜக.,விற்கு பலமாக அமைந்துள்ளதாகவும் இதை கருதலாம்.  ஆனால் ஓபிஎஸ் இதுவரை தனது பலத்தை கட்சியிலும் சரி, பொது வெளியிலும் சரி நிரூபிக்கவே இல்லை. வெறும் காகித அளவில் மட்டுமே அவர் பலமாக இருக்கிறார். அதிமுக., ஓட்டுக்கள் பிரிந்து, அதனால் பாஜக.,வின் ஓட்டு வங்கி சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. 




அப்படியானால் அதிமுக தமிழகத்தில் பலவீனமடைந்து விட்டதா? ஓபிஎஸ் கட்சியில் இருந்து விலகியது தான் இதற்கு காரணமா? ஓபிஎஸ்.,ஐ மீண்டும் அதிமுக சேர்த்துக் கொண்டால் 2026ல் ஆட்சியை பிடிக்க முடியுமா? லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகவும், திராவிட கட்சிகளுக்கு மாற்றாகவும் பாஜக., உருவெடுக்குமா? லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக.,வில் மிகப் பெரிய மாற்றம் வருமா? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன. 


இருந்தாலும் இது கருத்துக் கணிப்பு முடிவுகள் மட்டுமே. தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பதால், மக்களின் முடிவும் ஆதரவும் யாருக்கும் சாதகமாக உள்ளது என்பது ஜூன் 04ம் தேதி தெரியவரும். அதுவரைக்கும் நிறைய படித்து பொழுதைப் போக்கிக் கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகப் பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு: 2 நாட்களுக்கு Citizen Portal இணையதளம் செயல்படாது!

news

கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!

news

தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி

news

முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி

news

தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?

news

பக்தர்களே தயராகுங்கள்! பழனி தைப்பூசத் திருவிழா ஜனவரி 26-ல் தொடக்கம்!

news

விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!

news

ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!

news

வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்