டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கிறதா பாஜக?.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பரபர முடிவுகள்

Feb 05, 2025,07:01 PM IST
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்து விட்ட நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகள் அனைத்திலுமே பாஜகதான் அதிக இடங்களைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுகாலம் வரை அங்கு இருந்து வந்த ஆம் ஆத்மியின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

டெல்லி சட்டசபைக்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இதற்கு இன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் 3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி புரிந்து வருகிறது.  2013ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது. அது கவிழ்ந்த காரணத்தால் 2015ல் நடந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். சட்டசபையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை அப்போது ஆம் ஆத்மி பதிவு செய்தது. இதையடுத்து 2020ல் நடந்த தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மியே வென்றது.



3 முறை முதல்வராக இருந்த கெஜ்ரிவால், சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிஷி தலைமையில் சட்டசபைத் தேர்தலை சந்தித்தது ஆம் ஆத்மி கட்சி. இன்று வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்குமா ஆம் ஆத்மி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வந்துள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

சாணக்யா - ஆம் ஆத்மி (25 முதல் 28), பாஜக (38 முதல் 44), காங்கிரஸ் (2 முதல் 3)

ஜேவிசி - ஆம் ஆத்மி (22 முதல் 31), பாஜக (39 முதல் 45), காங்கிரஸ் (அதிகபட்சம் 2 தொகுதிகள்)

மாட்ரிஸ் - ஆம் ஆத்மி (32 முதல் 37), பாஜக (35 முதல் 40), காங்கிரஸ் (அதிகபட்சம் 1 தொகுதி)

பி மார்க் - ஆம் ஆத்மி (21 முதல் 31), பாஜக (39 முதல் 49), காங்கிரஸ் (அதிகபட்சம் 1)

பீப்பிள்ஸ் இன்சைட் - ஆம் ஆத்மி (25 முதல் 29), பாஜக (40 முதல் 44), காங்கிரஸ் (அதிகபட்சம் 2)

பீப்பிள்ஸ் பல்ஸ் - ஆம் ஆத்மி (10 முதல் 19), பாஜக (51 முதல் 60), காங்கிரஸ் (பூஜ்ஜியம்)

போல் டயரி - ஆம் ஆத்மி (18 முதல் 25), பாஜக (42 முதல் 50), காங்கிரஸ் (அதிகபட்சம் 2)



ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என பெரும்பாலான கணிப்புகள் கூறியுள்ளன. சில கணிப்புகளில் கடுமையான போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 கணிப்புகளில் பாஜகவுக்கு 40 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்