வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

Jul 01, 2025,04:29 PM IST

மும்பை:  IIT-Bombay வளாகத்தில் 22 வயது இளைஞர் ஒருவர், மாணவன் போல நடித்து இரண்டு வாரங்கள் தங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலால் அகமது டெலி என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர் போலியான ஆவணங்களை காட்டி, PhD மாணவர் போல் நடித்து வந்துள்ளார். பணம் சம்பாதித்து, சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மும்பை ஐ.ஐ.டி வளாகத்தில் பிலால் அகமது டெலி என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் அங்குள்ள ஒரு சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஊழியர் ஒருவர் அவரைப் பார்த்து விசாரித்துள்ளார். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த ஊழியர், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். CCTV பதிவுகளை ஆய்வு செய்ததில், அவர் மாணவர் இல்லை என்பது உறுதியானது.


பிலால் அகமது டெலி வளாகத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிந்துள்ளார். விடுதி ஓய்வு அறைகளில் தூங்கியுள்ளார். விரிவுரைகளில் கலந்து கொண்டுள்ளார். AI (Artificial Intelligence) தொடர்பான கருத்தரங்கிலும் பங்கேற்றுள்ளார். தான் ஒரு PhD மாணவர் என்று கூறி, அதற்கான போலியான ஆவணங்களையும் காட்டியுள்ளார். இலவச உணவு மற்றும் பானங்கள் கிடைக்கும் இடங்களில் அடிக்கடி சென்று வந்துள்ளார்.




விசாரணையில், பிலால் அகமது டெலி கடந்த 2023-ம் ஆண்டு ஒரு மாதம் IIT-Bombay-ல் தங்கியிருந்தது தெரியவந்தது. அப்போதும் அவர் யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட பிலால் அகமது டெலி ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மும்பை குற்றப்பிரிவு மற்றும் மத்திய உளவு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. அவரது தொலைபேசியில் இருந்து நீக்கப்பட்ட தரவுகளை சைபர் ஆய்வகத்தில் இருந்து மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது. தேச விரோத நோக்கங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


உளவுத்துறை அதிகாரிகள், இது ஒரு பெரிய திட்டமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது, பிலால் அகமது டெலி 21 மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கியதாக ஒப்புக்கொண்டார். அவற்றை வைத்து வலைப்பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பிரபலமானவராக முயற்சி செய்ததாகவும் கூறினார். "அதிக பணம் சம்பாதித்து, ஆன்லைனில் புகழ் பெற வேண்டும் என்பதே தனது நோக்கம்" என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.


பிலால் அகமது டெலி 12-ம் வகுப்பு முடித்த பிறகு, ஆறு மாத காலம் மென்பொருள் மேம்பாட்டுப் பயிற்சியும், ஒரு வருட காலம் இணைய வடிவமைப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார். தற்போது சூரத் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ. 1.25 லட்சம் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். அவர் துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது விசாரணையில் கூடுதல் தகவல்களை அளித்துள்ளது.


இந்த சம்பவம் IIT-Bombay வளாகத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு சாதாரண இளைஞர், எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் எப்படி இவ்வளவு நாட்கள் வளாகத்தில் தங்கியிருக்க முடிந்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், பிலால் அகமது டெலியின் நோக்கம் பணம் சம்பாதிப்பதா அல்லது வேறு ஏதேனும் சதி திட்டமா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்