- பா. சுரேஷ் பாபு
தந்தை விரல் பிடித்து நடந்த
மழலை நாட்களின் ஈர நினைவு
சிறகு முளைக்காத சிட்டுக் குருவியின்
வானமாகத் திகழும் தந்தையின் அன்பு
நெற்றி வியர்வை சிந்தி அவர்
சேர்த்த சேமிப்பு மகளின் சிரிப்பு
கல் முள் நிறைந்த பாதையில்
கவசமாய் நின்ற இமய மலை
ஆயிரம் உறவுகள் வந்து போயினும்
ஆலமரமாய் நிழல் தருபவர் தந்தை
பெண்மையின் முதல் நாயகன் இன்றும்
பேசாத மௌனத்திலும் பொங்கும் பாசம்

கண்ணீர்த் துளியைத் துடைக்கும் கரம்
காலங்கள் கடந்தும் மாறாக் காதல்
தந்தைமையின் தியாகத்தில் ஒளிரும் வாழ்வு
(சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பா. சுரேஷ் பாபு 116 முறை இரத்த தானம், உடல் உறுப்பு தானம் மற்றும் முடி தானம் செய்துள்ளார். 21 உலக சாதனைகளைப் படைத்து, 9 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ள இவரது பெயர், இந்திய அரசின் பத்ம விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 172 நாடுகளின் நாணயங்கள் மற்றும் தபால் தலைகளைச் சேகரித்து வரும் இவர், சென்னை நாணயவியல் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். 42 சிறுகதைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதியுள்ள இவர், தற்போது திருவள்ளுவரைப் பின்பற்றி 1330 'புதிய குறள்களை' எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாரத்தான் வீரராகவும், விவித் பாரதி மற்றும் இலங்கை FM-ன் சிறப்பு கவிஞராகவும் மிளிரும் இவரது சாதனையைப் போற்றி இந்திய அஞ்சல் துறை இவரது புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை (My Stamp) வெளியிட்டுள்ளது).
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}