சென்னை: நீ 16 வயதிலேயே எங்களை விட்டுப் பிரிவாய் என்று தெரிந்திருந்தால் உன்னை எங்கேயும் அனுப்பாமல் என் பக்கத்திலேயே வச்சிருந்திருப்பேனே என்று விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி வேதனையுடன் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா விஜய் ஆண்டனி சமீபத்தில் தற்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அனைவரையும் இது அதிர வைத்தது. 16 வயதேயான மீரா விஜய் ஆண்டனியின் இந்த எதிர்பாராத முடிவு அனைவரையும் வேதனைப்பட வைத்து விட்டது.
இந்த நிலையில் தனது மகளின் பிரிவிலிருந்து இன்னும் அவரது தாயார் பாத்திமா விஜய் ஆண்டனி வெளிவரவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து பாத்திமா ஒரு போஸ்ட்ட் போட்டுள்ளார். அதில் அவர் உருக்கமாக கூறியிருப்பதாவது:
நீ 16 வயது வரைதான் வாழ்வாய் என்று தெரிந்திருந்தால், உன்னை எங்கேயும் அனுப்பாமல், என் பக்கத்திலேயே வைத்திருந்திருப்பேனே. சூரியனையும் சந்திரனையும் கூட உனக்குக் காட்டாமல் என் பக்கத்திலேயே உன்னை வைத்து பார்த்திருப்பேனே. உன்னுடைய நினைவுகளில் நான் தினசரி மூழ்கிக் கொண்டிருக்கிறேன். செத்துக் கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. சீக்கிரம் அப்பா, அம்மாவிடம் வந்து விடும்மா. உனக்காக லாரா காத்துக் கொண்டிருக்கிறாள்.. லவ் யூ தங்கமே என்று கூறியுள்ளார் பாத்திமா விஜய் ஆண்டனி.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}