பெண்களுக்கு வேலை நேரம் குறைப்பு... அட நம்புங்க.. நம்ம புதுச்சேரியில் தான்!

Apr 28, 2023,03:16 PM IST
புதுச்சேரி : வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வேலை நேரம் 2 மணி நேரம் குறைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவது தொடர்பான சட்ட மசோதா குறித்த விவகாரம் படுதீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த நாட்களாக இதை வைத்தே அரசியல் தலைவர்கள் விதவிதமாக அறிக்கை வெளியிட்டும், கருத்து தெரிவித்தும் வருகின்றனர். சாமானிய மக்கள் துவங்கி, அரசியல் கட்சிகள் வரை 12 மணி நேர வேலை நேரம் பற்றிய பேச்சு தான் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.



இந்த சமயத்தில் புதுச்சேரியில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரண்டு மணி நேரம் வேலை குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பெண்களுக்கான வேலை நேரம் என்பது காலை 9 மணிக்கு பதிலாக 11 மணியாக மாற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலை பளு அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு அன்று ஒரு நாள் மட்டுமாவது காலை பணி நேரத்தை 9 மணி முதல் வேலை நேரம் என்பதை 11 மணி என மாற்ற அரசிடம் பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற அரசு, உத்தரவாக வெளியிட்டுள்ளது. 

அதேசமயம், வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் பூஜை செய்து விட்டு வர வசதியாகவும் இந்த நேரச் சலுகை தரப்பட்டிருப்பதாக இந்த புதிய உத்தரவிற்கு ஒப்புதல் அளித்த புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை செளந்தரராஜனும் தெரிவித்திருக்கிறார். துணை நிலை கவர்னர் தமிழிசையும், முதல்வர் ரங்கசாமியும் இணைந்து கூட்டாக இந்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!

news

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!

news

சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி

news

மனமாற்றம் வேண்டும்!!

news

போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!

news

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்

news

இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!

news

தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்