சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய வீரர் டி குகேஷூக்கு ரூ.11.45 கோடி வழங்குகிறது சர்வதேச செஸ் சம்மேளனம். மேலும் அவருக்கு வாழ்த்துகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இந்திய கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 18 வயதான டி குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது 22 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்தே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது தனது 18 வயதில் முறியடித்துள்ளார் டி குகேஷ்.

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி வெற்றி பெற்றார் டி குகேஷ். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்திய வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். முதல் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் என்பது நினைவிருக்கலாம்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி குகேஷூக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டி குகேஷூக்கு ரூ.5 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷூக்கு ரூ.11.45 கோடி வழங்குகிறது என்று சர்வதேச செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, டெஸ்லா தலைவரும், எக்ஸ் தலத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கும், குகேஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு
கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?
இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)
தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?
திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை
பொம்மையம்மா.. பொம்மை!
நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!
{{comments.comment}}