- மஞ்சுளா தேவி
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 73 வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், பல்துறைப் பிரமுகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.
1950 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பிறந்து, பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கையை தொடங்கி, திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டில் வெளியான அபூர்வ ராகங்கள் மூலமாக தமிழ் திரைஉலகில் நாயகனாக அறிமுகமானவர். ஆரம்பத்தில் வில்லனாக பயணித்து பிறகு ஹீரோவாகி அப்படியே சூப்பர் ஸ்டாரானவர் ரஜினிகாந்த்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் சுமார் 165 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருடைய படங்கள் என்றாலே இமாலய வசூல்தான் பிரதானமாக இருக்கும். இவருடைய நடை, உடை, ஸ்டைல் நடிப்பின் திறமையால் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்தவர் . இவருடைய ஸ்டைல், நடிப்பு மட்டுமல்லாமல் திரையில் இவர் பேசும் பஞ்ச் டயலாக் சும்மா மாஸாக பட்டைய கிளப்பும் வகையில் அமைந்திருக்கும்.
ரஜினிகாந்த்தின் 73 வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திரை பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
கமல்ஹாசன் வாழ்த்து:
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்டில், அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகரும், ரஜினிகாந்த்தின் மருமகனுமான தனுஷ் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா..!" என்று ட்விட் போட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தலைமுறைகள் கடந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டாருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் .அவரது கலையுலக பயணம் இன்னும் பல உயரங்களை அடையவும் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா.. ராகவேந்திரா ஸ்வாமிகளிடம் உங்கள் நலம் பெற பிராத்திக்கிறேன். நீண்ட ஆயுளுடன் வாழ்க.. குருவே சரணம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், நமது நாட்டின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் மற்றொரு பெருமைமிக்க ஆண்டை நீங்கள் கொண்டாடும் போது நாங்களை உங்களை கொண்டாடுகிறோம். மிக அற்புதமாக பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று மகிழ்ந்துள்ளார்.
வைரமுத்து வாழ்த்து:
கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தங்களுக்குத் தேவையான ஏதோ ஒரு மின்னோட்டம் உங்களிடம் உள்ளதாக மக்கள் நம்புகிறார்கள். அதை மிக்க விலை கொடுத்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜ வாழ்க்கையின் நேர்மை தான் என்னை வசீகரிக்கிறது. எதையும் மறந்ததில்லை என்னிடம் நீங்கள் பலம் பலவீனம் பணம் பணவீனம் எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்.
உடல் மனம் வயது கருதி நீங்கள் எடுத்த அரசியல் முடிவு உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கையெல்லாம் வழிவகுக்கும். வாழ்த்துகிறேன். விரும்பும் வரை வாழ்க என்று தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டாருக்கு நாமளும் சேர்ந்து வாழ்த்துக்களை தெரிவிப்போம்!
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}