சென்னை: கார்த்தி நடிப்பில் சர்தார் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வரும் நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் இரண்டு கதாபாத்திரங்களுக்கு வித்தியாசம் கொடுத்து கார்த்தியின் எதார்த்தமான நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மாபெரும் திரை விருந்தாக அமைந்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதன் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது.
இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் மீண்டும் நடிகர் கார்த்தி சந்திரபோஸ் மற்றும் விஜய் பிரகாஷ் என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோடியாக ஆஷிகா ரங்கநாத், பிரியங்கா மோகன் ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் தயாரித்து வருகிறார். கார்த்தியின் நெருங்கிய நண்பரான இவர் முதல் பாகத்தையும் தயாரித்திருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்ட செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கார்த்தி மற்றும் எஸ் ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பிற்காகவும் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காக எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி வா வாத்யாரே படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் தயாரித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் படத்தின் வெளியீடு தேதி குறித்து எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}