டெல்லி: இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு அதிகாரியான பூனம் குப்தாவின் திருமணம் நடைபெறவுள்ளது.
அவரது சிறந்த சேவை காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக பூனம் குப்தா - அஸ்வின் குமார் இடையிலான திருமண வைபவம், ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ளது.
குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படை அதிகாரி தலைமையேற்று பணிபுரிந்து வரும் சிஆர்பிஎஃப் துணை கமாண்டராக இருக்கிறார் பூனம் குப்தா. அவருக்கும் சி ஆர்பிஎஃப் துணை கம்மாண்டராக பணியாற்றும் அஸ்வின் குமாருக்கும் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் திருமண வைபோக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை திருமண நிகழ்ச்சி எதுவுமே நடந்தது இல்லை. அந்த வகையில், வரலாற்றிலேயே முதல் முறையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமண விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுமதியுடன் பூனம் குப்தாவின் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசு மாளிகை வெளியிட்டுள்ளது.
பூனம் குப்தாவின் சிறந்த சேவை, நாட்டிற்கான அர்ப்பணிப்பு, கடமை தவறாமல் பணியாற்றுதல், நடத்தை விதிகளை முறையாக பின்பற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பூனம் குப்தாவின் திருமண நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடியரசு மாளிகையில் திருமணம் செய்து கொண்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்று சாதனை படைக்கவுள்ளார் பூனம் குப்தா.

பூனம் குப்தா திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}