திறக்கப்பட்டது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்.. சீறிப் பாய்ந்த காளைகள்.. மதுரையில் 2வது பொங்கல்!

Jan 24, 2024,09:40 AM IST

மதுரை: மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து கொடியசைத்து முதல் ஜல்லிக்கட்டு போட்டி  தொடங்கி வைத்தார்.


ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவிற்கு பின்னர் கீழக்கரையில் அமைத்துள்ள மைதானத்தில் முதல் ஜல்லிக்கட்டு உலகத் தரத்துடன் தொடங்கியது. பிரமாண்ட கிரிக்கெட் போட்டியைப் போன்ற தோற்றத்தை இது காட்சி தந்ததால் மக்கள் வித்தியாசமான அனுபவமாக இதை உணர்ந்தனர்.




ஜல்லிக்கட்டு அரங்கத்தைத் திறந்து வைத்து விழா உரையாற்றிய பின்னர் பச்சைக் கொடி காட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் தொடங்கி வைத்தார். முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து  பிற காளைகள் சீறிப் பாய போட்டி களை கட்டியது.


காளைகளை அடக்கி முதல் பரிசு பெறும் வீரருக்கும், சிறந்த காளைக்கும், மகிந்திரா தார் ஜீப் காரும், ரூ. 1 லட்சம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.


சூப்பர் பரிசுகள்




முதல் பரிசு தவிர, காளைக்கும், மாடு பிடி வீரருக்கும் 2வது பரிசாக  ஒரு பைக் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் பணம் வழங்கப்பட உள்ளது.  போட்டியில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழக்கம் போல, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், அண்டா, சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது.


இந்த அரங்கம் அமைக்கப்பட்டதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர். இப்போட்டியினை 5000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பத்தாயிரம் பேர் வரை  கூட அமர முடியுமாம். வருகை தரும் பார்வையாளர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியினைக் காண மாற்றுத்திறாளிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 




மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்


மாற்றுத் திறனாளிகளுக்காக வீல் சேர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், காளைகளுக்கு தேவையான தீவனங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இவ்வரங்கை திறந்து வைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார். இவரை தொடர்ந்து பல முக்கிய பிரமுகர்களும் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 2000த்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


போட்டி நடைபெறும் மைதானத்தில் ஆயிரக்கணக்கில்  மக்கள் குவிந்துள்ளனர். ஏராளமான பெண்களும் ஸ்டேடியத்தின் க ாலரியில் அமர்ந்து போட்டியை உற்சாகமாக கண்டு களிக்கின்றனர். சிறப்பான பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் மிகவும் பாதுகாப்பாகவும் போட்டியை ரசிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்