குடிகாரரின் கலாட்டா.. டீச்சருக்கு.. முதல் வகுப்பு மாணவன் கூறிய ஆலோசனை!

May 05, 2026,01:38 PM IST

- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா


நான் வேப்பஞ்செட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குப் பணி மாறுதலில் சென்றிருந்தபோது, அங்கு முதல் வகுப்பில் ஓம் குமார் என்ற சிறுவன் வந்து சேர்ந்தான். அவன் மிகவும் சுட்டிப் பையன். வகுப்பிற்குள்ளே வரமாட்டான்; ஜன்னலைப் பிடித்துக் கொண்டு வெளியிலேயே அமர்ந்திருப்பான். உள்ளே கூப்பிட்டாலும் வரமாட்டான். எங்களுடைய பள்ளி ஈராசிரியர் பள்ளியாக இருந்ததால், அன்று தலைமையாசிரியர் விடுப்பு எடுத்து இருந்தார்.


அன்று மாலை 3 மணி அளவில் வேப்பஞ்செட்டு ஊரைச் சேர்ந்த ஒரு குடிகாரர் எங்கள் பள்ளிக்குள் நுழைந்தார். அவர், "என்ன ரெண்டு பேர் இருக்க வேண்டிய இடத்துல நீங்க ஒருத்தர் மட்டும் இருக்கீங்களே? சார் வரலையா? நீங்க ஒரு நாள், அவர் ஒரு நாள் வந்துட்டு இருக்கீங்களா?" அப்படின்னு சொல்லி கேட்டார். அதற்கு நான் சொன்னேன், "எங்களுக்கு அரசு 12 நாள் சி.எல் கொடுத்திருக்கிறார்கள், மூன்று நாள் ஆர்.எச் கொடுத்திருக்கிறார்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத போது மருத்துவ விடுப்பு கொடுத்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்குத் தேவைப்படும்போது நாங்கள் விடுமுறை எடுத்துக் கொள்வோம். இரண்டு பேர் பணிபுரிவதால் ஒருவர் விடுமுறை எடுத்தால் ஒருவர்தான் பள்ளியைக் கவனித்துக் கொள்கிறோம். இதுதான் நடைமுறை. அதுக்கு ஏன் நீங்க வந்து சத்தம் போடுறீங்க?" அப்படின்னு கேட்டேன். 


அவர் குடித்திருந்ததினால் இஷ்டத்துக்குப் பேசியிருந்தார். அவர் சத்தமாப் பேசின உடனே பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க. வந்து அவரைச் சத்தம் போட்டு, "வீட்டுக்கு போகலையா?" அப்படின்னு சொல்லி சொன்னாங்க.




பக்கத்து வீட்டுக்காரர் தலைமையாசிரியருக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தார். தலைமையாசிரியர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, "டீச்சர், நீங்க எனக்குத் தகவல் சொல்லி இருக்கலாமே? நான் வேணா கிளம்பி வரவா?" அப்படின்னு கேட்டார். "என்ன சார் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, ஊர் மக்கள் பாதி பேர் வந்துட்டாங்க" என்றேன்.


"நான் தான் டீச்சர் போன் பண்ணி பசங்களை எல்லாம் போயி ஸ்கூல்ல பாருங்க, நான் லீவு டீச்சர் மட்டும் தனியா இருக்காங்க, வேற ஒருத்தர் வந்து சத்தம் போட்டுட்டு இருக்காங்களாம் போயி என்னன்னு பாருங்கன்னு சொன்னேன்" அப்படின்னாரு. ரொம்ப நன்றி சார். அப்ப அந்த குடிகாரரோட மகனே வந்து அவரைத் திட்டி, "வீட்டுக்கு போக மாட்டியாப்பா? ஏன் பள்ளிக்கூடத்துல வந்து டீச்சரைத் திட்டிகிட்டு இருக்க?" அப்படின்னு சொல்லி அவரை அடிச்சு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.


அப்ப இந்த ஓம் குமார் என்கிற பையன், "டீச்சர், குடிச்சிட்டு வந்து ஸ்கூல்ல சத்தம் போட்டுக்கிட்டு இருக்காங்க. நீங்க உடனே உங்களுக்குப் பெரிய அதிகாரியா இருப்பாங்க இல்ல, அவங்களுக்குப் போன் பண்ணி சொன்னீங்கன்னா அவங்க போலீசுக்குப் போன் பண்ணி போலீஸ் வர வச்சிருப்பாங்க. அவரைப் போலீஸ்ல புடிச்சுக் கொடுத்திருக்கலாம் இல்ல?" அப்படின்னு சொன்னான். 


உடனே நான் சொன்னேன், "டேய் ஓம் குமார், அவர் நம்ம ஊர்க்காரர்டா. அவர் குடிச்சிருக்காரு, அவர் என்ன பேசுறாருன்னு அவருக்கே தெரியல. நம்ம இதுக்கெல்லாம் புகார் கொடுக்கக் கூடாதுடா. எதுவா இருந்தாலும் பேசி முடிக்கணும். நிலைமை கைமீறிப் போகையிலதான் அந்த நடவடிக்கை எல்லாம் எடுக்கணும்டா" அப்படின்னு சொன்னேன். "அப்படியா டீச்சர்?" அப்படின்னு சொன்னான்.


அவன் வெளியில உட்கார்ந்துகிட்டுப் பாடம் நடத்துவதைக் கவனிப்பான், திரும்பவும் சொல்லுவான். ஆனா எழுத மட்டும் மாட்டான். அவனுக்கு எழுதுறதுலதான் பிரச்சனை இருக்குது என்பதைக் கண்டுபிடித்த உடனே அவன்கிட்ட அன்பா பேசி, "ஓம் குமார் நீ எழுதவெல்லாம் வேண்டாம், எவ்வளவு நேரம் தான் ஜன்னல் மேலே உட்கார்ந்து இருப்ப? வா உள்ள வந்து உட்கார்ந்துக்கோ" அப்படின்னு சொன்ன உடனே, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வகுப்பறைக்குள் வந்து உட்கார ஆரம்பிச்சான்.


"எழுதுறது பெரிய பெரிய எழுத்தா எழுதாம கொஞ்சம் சின்னதா எழுதினா இன்னும் உன் கையெழுத்து அழகா இருக்கும்" அப்படின்னு சொன்ன ஒரு வாரம் கழிச்சு, எழுதவே மாட்டேன்னு இருந்தவன் அதிகமா எழுத ஆரம்பித்தான். அவங்க அப்பா அம்மா, "பள்ளி விடுமுறை நாட்களில் கூட ஓம் குமார் பள்ளிக்கூடத்துல நடத்துனதை வீட்ல வந்து எழுதிக்கிட்டே இருக்கான்" அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க. அதைக் கேட்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்