4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு

Jun 17, 2025,12:39 PM IST

பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா என்ற பிரபல பெண் ஞானி, 2025ம் ஆண்டு நான்கு ராசிக்காரர்கள் பெரும் கோடீஸ்வர்கள் ஆவார்கள் என்று கணித்துள்ளாராம்.


பாபா வங்கா, அக்டோபர் 3, 1911 அன்று துருக்கியின் ஒரு பகுதியாக இருந்த ஸ்ட்ருமிட்சாவில் பிறந்தார். அவருடைய முழு பெயர் வங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா. பாபா வங்கா 1996-ல் இறந்தார். அவர் 20-ம் நூற்றாண்டின் பிரபலமான ஞானிகளில் ஒருவர். எதிர்காலத்தில் நடக்க உள்ள பல முக்கியமான  நிகழ்வுகளை முன்பே கணித்து வைத்துள்ளார். அதில் பல பலித்துள்ளன. 


பாபா வங்கா, "பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படுகிறார். அவர் சொன்ன பல விஷயங்கள் நடந்ததால், இந்த வருடம் அவர் பெயர் அடிக்கடி செய்திகளில் வருகிறது. பாபா வங்கா,  12 வயதில் பார்வையிழந்துவிட்டார். ஆனால், அதன் பிறகு அவருக்கு எதிர்காலத்தை பார்க்கும் திறன் வந்ததாக சொல்லப்படுகிறது. 9/11 தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2001-ல் நியூயார்க் இரட்டை கோபுரங்கள் தாக்குதல், சீனாவின் வளர்ச்சி போன்ற பல விஷயங்களை அவர் முன்பே கணித்தார்.


இந்த நிலையில், 2025-ல் சில ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் வரப்போகிறது என்றும் சொல்லியிருக்கிறார். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆக போகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். யார் அந்த அதிர்ஷ்டசாலின்னு வாங்க பார்ப்போம்.


மேஷம்:




மேஷ ராசிக்காரர்கள் இந்த வருடம் மாற்றங்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மாற்றங்களை பயப்படாமல் சந்திக்க வேண்டும். நிறைய வாய்ப்புகள் வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தைரியம் மற்றும் மன உறுதியுடன் தடைகளை தாண்டி சாதனைகள் படைக்கலாம். நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்க தயாராக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். பாபா வங்கா சொன்னது: "மாற்றம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரிய பலன் கிடைக்கும். எந்த மாற்றத்தையும் குழப்பத்துடன் பார்க்காமல், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்."


ரிஷபம்:


ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஒரு சந்தோஷமான வருடமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்ததற்கான பலன் கிடைக்கும். முதலீடுகளில் கவனமாக இருந்தால், நல்ல லாபம் கிடைக்கும். இது உங்கள் புகழை அதிகரிக்கவும், உங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கவும் சரியான நேரம். கஷ்டமான காலத்திற்கு பிறகு, 2025 உங்களுக்கு ஒரு நிலையான வாழ்க்கையை கொடுக்கும்.


மிதுனம்:


மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நிறைய வாய்ப்புகள் வரும். உங்கள் அறிவையும், திறமையையும் பயன்படுத்தி சவால்களை சமாளிக்கலாம். இதன் மூலம் பண பிரச்சனைகள் தீரும். நீங்கள் சமூகத்தில் எப்படி பழகுறீங்க என்பதை பொறுத்து தான் உங்க வெற்றி இருக்கு. இந்த வருடம் உங்களுடைய கிரியேட்டிவிட்டி திறமையை அதிகமாக பயன்படுத்துங்க. வழக்கமான பாதையை விட்டுட்டு, உங்க மனசு சொல்வதை கேளுங்க. நீங்க உங்க உண்மையான அடையாளத்தை கண்டுபிடித்தால், நிறைய வாய்ப்புகள் வரும்.


சிம்மம்:


2025-ல் சிம்ம ராசிக்காரர்கள் பிரகாசமாக இருப்பார்கள். இதனால் உங்களுடைய பண பிரச்சனைகள் தீரும். நீங்கள் சந்தோஷமாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும். சரியான முடிவுகள் எடுத்தால், நிறைய லாபம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கு. புதுசா பிசினஸ் தொடங்கலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  பாபா வங்கா சொன்னது: "2025-ல் நீங்கள் பார்ட்டிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பல வருடங்களாக இருந்த மன கஷ்டங்கள் நீங்கி தெளிவான மனநிலையுடன் இருப்பீர்கள். வருடத்தின் முதல் பாதி உறவுகளை வலுப்படுத்தவும், உங்கள் லட்சியங்களுக்கான அடித்தளத்தை அமைக்கவும் உதவும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்