உணவு பழக்கமும் பழமொழிகளும்.. சூப்பர் காய்.. பாகற்காய்.. கசந்தாலும் உடம்புக்கு நல்லது!

May 28, 2026,05:18 PM IST

பிட்டர் கார்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாகற்காய்.. ஒரு அற்புதமான மருத்துவ குணம் கொண்ட காயாகும். பாகற்காய் பற்றிய சில முக்கிய தமிழ்ப் பழமொழிகள் அவற்றின் விளக்கங்கள் பற்றி பார்ப்போம்..


பாகற்காய் என்றாலே ஒரே கசப்பு என்பதுதான் அனைவருக்கும் மனதில் தோன்றும்.ஆனால், பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதனால் அதனுடைய நன்மைகள் ஏராளம். அறுசுவைகளான இனிப்பு-sweet , புளிப்பு-sour,  துவர்ப்பு-astringent , கசப்பு-bitter , உப்பு- (உவர்ப்பு) salt, கார்ப்பு-  (உறைப்பு)  spicy , இதில் கசப்பு என்பதும் ஒரு சுவை தானே. இந்த ஆறு சுவைகளும் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் சரியான அளவில் வழங்குகின்றன.


தமிழ் பண்பாட்டில் பாகற்காயை அடிப்படையாகக் கொண்டு சில பழமொழிகள் மற்றும் சொலவடைகள் உள்ளன. பாகற்காய் கசப்பு தன்மை கொண்டிருந்தாலும் அது உடலுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகளைப் போல வாழ்க்கையின் கசப்பான நிகழ்வுகள் நம் வாழ்க்கைக்கு நல்ல அனுபவங்களே என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது இந்த பழமொழிகள்.


பழமொழிகள்:


1. பத்திய முறிவுக்கு பாகற்காய் :




நமக்கு உடல் நலம் சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது உணவு கட்டுப்பாடு அதாவது பத்தியம் மேற்கொள்வோம். அந்த உணவு கட்டுப்பாட்டில் ஏற்படும் சில தவறுகளை சரி செய்து உடலுக்கு நலம் சேர்க்கும் காயாக பாகற்காய் விளங்குகிறது.


2. "கசந்தாலும் பாகற்காய்  காறினாலும்  கருணைக்கிழங்கு "


பாகற்காய் கசப்பாக இருந்தாலும், கருணைக்கிழங்கு நாக்கில் அரிப்பு எடுத்தாலும்,அவை இரண்டின் மருத்துவ குணம் மற்றும் சுவையை உணர்ந்தவர்கள் அதனை மிகவும் விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள். பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை உடலுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகளைப் போல வாழ்க்கையில் ஏற்படும் கசப்பான அனுபவங்களும் நம் மனதை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று  நன்மை தரும் என்பதை  இப் பழமொழி  உணர்த்துகிறது.


3. "பாகற்காய்க்கு உப்பு பதம் அறிந்து போடு "


பாகற்காயை சமைக்கும் பொழுது அதனுடைய கசப்பு குறைய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற அளவில் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும். வாழ்வில் கசப்பான அனுபவங்கள் ஏற்படும் பொழுது அதற்கு தகுந்த மனப்பக்குவம் இருந்தால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பதை இப் பழமொழி உணர்த்துகிறது. 


4.  "பாவமும் கசப்பும்"


பாகற்காயின் கசப்பு எவ்வளவு வெல்லம் சேர்த்து சமைத்தாலும் முழுமையாக மாறாது அதனுடைய கசப்புத் தன்மை சிறிது குறையும். ஆனால், முழுமையாக கசப்பு போகாது. சுவை சிறிது மாறலாம்.ஆனால் அதன் இயல்பு மாறாது.  இந்தப் பழமொழியை மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கும் முன்னோர்கள் ஒப்பிட்டு கூறியுள்ளனர். மனிதன் வாழ்வில் செய்யும் நல்லதும், கெட்டதும் அவனை விட்டு  பிரியாது என்பதே இந்த கருத்தின் மையம். மனிதன் செய்த தவறை முழுமையாக நீக்கி விட முடியாது அது வெயிலில் குடை பிடிப்பதே போல ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே அளிக்கும். 


உண்மையான மாற்றம் மனிதனின் மனசாட்சியிலும், அவனுடைய செயல்களிலும் அவற்றை வெளிப்படுத்துவதிலும், இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. 'பாவம் செய்யாதிரு மனமே ' என்பதை உணர்த்துகிறது. இது வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஒழுக்க பாடமாகும்.


மனிதன் தனது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றில் பொறுப்புடன் இருந்தால் மட்டுமே அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்.


நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு இல்லையா?.. ஃபிரண்ட்ஸ்..


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்