டெல்லி: கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு சுற்றுலா மற்றும் முதலீட்டு மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றிய அவர், தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரொனால்டோ, 2002 ஆம் ஆண்டு தனது டீன் ஏஜ் வயதில் கிள கால்பந்து விளையாட்டில் அறிமுகமானார். இதுவரை கிளப் மற்றும் நாட்டு அணிக்காக 950க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். தற்போது சவுதி அரேபியாவின் அல்-நாசர் கிளப்புடன் 2027 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்துள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ, தனது கோப்பைப் பட்டியலில் இல்லாத ஒரே பெரிய பட்டமான உலகக் கோப்பையை அடுத்த ஆண்டு வெல்வதையும் இலக்காகக் கொண்டுள்ளார்.

"சீக்கிரம் என்றால் 10 வருடங்கள் என்று அர்த்தம்... இல்லை, நான் வேடிக்கையாகச் சொல்கிறேன்," என்று ரொனால்டோ நகைச்சுவையாகக் கூறினார். "நான் இப்போது இந்த தருணத்தை மிகவும் ரசிக்கிறேன். கால்பந்தில், ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு, மாதங்கள் மிக வேகமாகச் செல்வதை உணர்கிறோம். நான் இப்போது நன்றாக உணர்கிறேன். கோல் அடிக்கிறேன், வேகமாகவும் கூர்மையாகவும் உணர்கிறேன். தேசிய அணியில் எனது விளையாட்டை நான் ரசிக்கிறேன். ஆனால், நேர்மையாகச் சொல்வதானால், நான் 'சீக்கிரம்' என்று சொல்வது ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் தான்."
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரொனால்டோ பங்கேற்பார் என்றும், அதுவே தனது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும்போது தனக்கு 41 வயது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். "நிச்சயமாக, ஆம். ஏனென்றால் நான் 41 வயதாக இருப்பேன்," என்று ரொனால்டோ கூறினார். சர்வதேச போட்டிகளில் 143 கோல்களுடன் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையும் ரொனால்டோ வசம் உள்ளது.
"நான் கால்பந்துக்காக எனது அனைத்தையும் கொடுத்துவிட்டேன். கடந்த 25 ஆண்டுகளாக இந்த விளையாட்டில் இருக்கிறேன். நான் அனைத்தையும் செய்துள்ளேன். கிளப்புகள் மற்றும் தேசிய அணிகள் என பல்வேறு நிலைகளில் பல சாதனைகளைப் படைத்துள்ளேன். நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனவே, இந்த தருணத்தை அனுபவிப்போம், இந்த தருணத்தில் வாழ்வோம்," என்று அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
தனது மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் தனது அடிச்சுவடுகளைப் பின்பற்றி போர்ச்சுகல் U-16 அணியில் விளையாடி வருவது குறித்தும் ரொனால்டோ பேசினார். உங்களை விட உங்களது மகன் சிறந்த வீரராக அவர் வருவாரா என்ற கேள்விக்கு, "மனிதர்களாகிய நாம், நம்மை விட யாரும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. ஆனால், எனது குழந்தைகள் என்னை விட சிறந்தவர்களாக வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் ஒருபோதும் பொறாமைப்பட மாட்டேன்," என்று பதிலளித்தார்.
"அவர் மீது நான் எந்த அழுத்தத்தையும் சேர்க்க விரும்பவில்லை. ஏனென்றால், அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவர் கால்பந்து விளையாட விரும்பினாலும் அல்லது வேறு ஏதேனும் விளையாட்டில் ஈடுபட விரும்பினாலும் சரி. மகிழ்ச்சியாக இருங்கள், சுதந்திரமாக இருங்கள். உங்கள் அப்பாவின் அழுத்தத்தில் வாழாதீர்கள், ஏனென்றால் அது மிகவும் அதிகம்," என்று அவர் தனது மகனுக்கு அறிவுரை கூறினார்.
"இது ஒரு புதிய தலைமுறை, ஒரு வித்தியாசமான தலைமுறை. அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள், வித்தியாசமாக வாழ்கிறார்கள். ஆனால் ஒரு தந்தையாக, அவர் என்னவாக ஆக விரும்பினாலும் அவருக்கு உதவ நான் இங்கு இருக்கிறேன். நான் அவருக்கு ஆதரவாக இருப்பேன்," என்று ரொனால்டோ தனது மகனுடனான உறவைப் பற்றி விளக்கினார். தான் வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுவேன் என்பதை ரொனால்டோ அறிந்திருந்தாலும், தனது மகனின் மகிழ்ச்சிக்கே அவர் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார்.
கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்.. அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
குத்துபாட்டிற்கு நடனமாடும் ஸ்ரேயா...அடுத்த ஹிட் பாட்டு ரெடி
காலபைரவர் ஜெயந்தி .. தேய்பிறை அஷ்டமி அல்லது காலாஷ்டமி தினம்.. பைரவர் வழிபாடு சிறப்பு!
தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது... இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு!
தங்கம் விலை உயர்வு: 2026ல் உலகப் பொருளாதாரம் சரியுமா.. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?
2026ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை.. பிளான் பண்ணி Fun பண்ணிக்கோங்க!
திடீரென மயங்கி விழுந்த நடிகர் கோவிந்தா.. மும்பை மருத்துவமனையில் அனுமதி
தர்மேந்திரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிலேயே வைத்தியம் பார்க்க குடும்பத்தினர் முடிவு
பெங்களூரிலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி.. சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது?
{{comments.comment}}