வாஷிங்டன்: மோயட் ஹென்னஸ்ஸி லூயிஸ் வுட்டன் நிறுவன தலைமை செயலதிகாரியும் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட்.. இவர் தாங்க இப்போது உலகின் நம்பர் 1 பணக்காரர். அப்படீன்னா.. நம்ம டிவிட்டர் தம்பி எலான் மஸ்க் என்ன ஆனார்.. அவர் 2வது இடத்துக்குப் போய் விட்டார்!.
உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் லேட்டஸ்டாக முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் அர்னால்ட். இதுவரை இருந்து வந்த எலான் மஸ்க் 2வது இடத்துக்குப் போய் விட்டார்.
அர்னால்டின் சொத்து மதிப்பு 23.6 பில்லியன் டாலர் அதிகரித்து 207.6 பில்லியனாக உள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பெர்னார்ட் அர்னால்ட். டெஸ்லா தலைமை செயலதிகாரி எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 204.7 பில்லியன் டாலராக உள்ளது. 18 மில்லியன் டாலருக்கும் மேல் அவரது வருவாய் குறைந்துள்ளதாக போர்ப்ஸ் கூறியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு முதலே அர்னால்டுக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையே முதலிடத்திற்குப் போட்டி இருந்து வருகிறது.
லூயிஸ் வுட்டன் நிறுவனத்தின் தியோர், பல்கேரி , செபோரா ஆகிய பிராண்டுகளின் மதிப்பு கூடியுள்ளதால், லூயிஸ் வுட்டன் நிறுவனத்தின் வருவாயும் அதிகரித்துள்ளது. இதனால்தான் அர்னால்ட் முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது..
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் உலகின் டாப் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியல்
பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் - 207.6 பில்லியன் டாலர்
எலான் மஸ்க் - 204.7 பில்லியன் டாலர்
ஜெப் பெசாஸ் - 181.3 பில்லியன் டாலர்
லாரி எலிசன் - 142.2 பில்லியன் டாலர்
மார்க் ஜுக்கர்பர்க் - 139.1 பில்லியன் டாலர்
வாரன் பபட் - 127.2 பில்லியன் டாலர்
லாரி பேஜ் - 127.1 பில்லியன் டாலர்
பில் கேட்ஸ் - 122.9 பில்லியன் டாலர்
செர்ஜி பிரின் - 121.7 பில்லியன் டாலர்
ஸ்டீவ் பால்மர் - 118.8 பில்லியன் டாலர்
போர்ப்ஸ் லிஸ்ட்டில்தான் பெர்னார்ட் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் ப்ளூம்பெர்க் பட்டியலில் அவருக்கு 3வது இடமே கிடைத்துள்ளது. முதலிடம் எலான் மஸ்க்குக்கும், 2வது இடத்தில் ஜெப் பெசாஸஸும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}