மோடி தலைமையிலான மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியாக செயல்படுகிறது: அண்ணாமலை தாக்கு!

Aug 28, 2025,06:24 PM IST

சென்னை: அமெரிக்காவின் வரிவிதிப்பை சமாளிக்க சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, பாமக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியான செயல்களை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே இருந்த 25 சதவீத வரியுடன், தற்போது மேலும் 25 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த அதிகப்படியான வரி விதிப்பின் காரணமாக  இந்தியாவில்  இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 70 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இதனால்,  தமிழகத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், 


இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்துள்ளது. இது தமிழகத்தில் ஏற்றுமதியை பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ரூ.3000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரின் வேலைவாய்ப்பு அபாயத்தில் உள்ளது. 




இந்தச் சூழலில்  தமிழக  தொழில்துறை மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.


இதனை, மேற்கோள் காட்டி முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, திமுக அரசை விட முன்னோடியான செயல்களை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பை சமாளிக்க, மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. இதற்காக நீங்கள் வலியுறுத்தாமல், தமிழகத்தில் நியாயமற்ற வகையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை முதல்வர் ஸ்டாலின் முதலில் திரும்பப் பெற வேண்டும் என்று பதில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்