பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் மது, போதைப் பொருட்கள்தான்.. ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

Feb 19, 2025,06:26 PM IST

சென்னை: மது விற்பனை படிப்படியாக குறைக்கப்படும் என்று சொல்லிக் கொண்டு மதுவை ஊக்குவிக்கின்ற அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மதுவிலக்கு துறையை மது ஊக்குவிப்பு துறையாக திமுக அரசு மாற்றி விட்டது. இது தவிர, போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு திறமையற்ற அரசாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 




மனிதனை விலங்கினின்று வேறுபடுத்தி காட்டுவது ஒழுக்கமே என்று சொன்னால் அது மிகையாகாது. 'ஒழுக்கம் விழுப்பம் தரும்',  'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை' போன்ற சான்றோர் வாக்குகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. உலகப் பொதுமறையாம் திருக்குறளில் ஒழுக்கமுடைமை, அறன் வலியுறுத்தல், சான்றாண்மை போன்ற அதிகாரங்களில் ஒழுக்கத்தை வலியுறுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். ஆனால், ஒழுக்கம் என்றால் என்ன விலை? என்று கேட்கக்கூடிய அவல நிலை தமிழ்நாட்டில் தற்போது நிலவுகிறது.


நேற்று முன்தினம் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஏழு கல்லூரி மாணவர்களால் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், நேற்று திருப்பூர் மாவட்டத்தில் சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு செல்வதற்காக கணவன் மற்றும் குழந்தையுடன் பேருந்து நிலையத்தை காத்திருந்தவர்களை, பனியன் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக நம்பிக்கை வார்த்தைக்கூறி அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று கத்தி முனையில் அந்த பெண்ணை மிரட்டி அவர் கணவர் மற்றும் குழந்தை கண் முன்னே மூன்று வட மாநில வாலிபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


மேற்படி சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும், பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆசிரியர்களே மாணவியரை பலாத்காரம் செய்யும் கொடுமைகள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்குக் காரணமாக விளங்குவது ஒழுக்கமின்மை.


இந்த ஒழுக்கமின்மை முக்கிய காரணம் அமோக மது விற்பனையும், அளவுக்கு அதிகமான போதைப் பொருட்கள் நடமாட்டம் தான். மது விற்பனை படிப்படியாக குறைக்கப்படும் என்று சொல்லிக் கொண்டு மதுவை ஊக்குவிக்கின்ற அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மதுவிலக்கு துறையை மது ஊக்குவிப்பு துறையாக திமுக அரசு மாற்றி விட்டது. இது தவிர, போதைப் பொருள்களில் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு திறமையற்ற அரசாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது.


திமுக அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக, தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. யார் எப்போது தாக்கப்படுவார்கள் என்று தெரியாத அலங்கோல நிலை தமிழ்நாட்டின் நிலவுகிறது. மக்களுக்கான பாதுகாப்பினை, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லை. பெண் காவலர்களை பாலியல் பராத்காரத்திற்கு உள்ளாக்கும் கொடூரம் தமிழ்நாட்டில் இருக்கிறது.


சட்டம் ஒழுங்கை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் அவர்கள், இனியாவது பாராட்டு மலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கள யதார்த்தம் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, தமிழ்நாட்டில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை வேரோடு அழிக்கவும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், பாலியல் வன்கொடுமையாளர்கள் மீது பாரபட்சமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்கவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்