சென்னை: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொண்ட அவர் அன்போடு அவரை கட்டிக் கொண்டார்.
தெலுங்கானா முதல்வரும் புதுச்சேரி துணை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதன் பின்னர் தான் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்ய இருப்பதால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் வந்தார். அங்கு அவருக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்பு அளித்தார். மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை சௌந்தர்ராஜன். இதனைத் தொடர்ந்து அவருக்கு உறுப்பினர் கார்டை அண்ணாமலை வழங்கினார். இதன் மூலம் தனது பழைய உறுப்பினர் எண்ணையும் பெற்றுக் கொண்டார்.
பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட பிறகு தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய இரு ராஜ பவனங்களை விட்டுவிட்டு மக்கள் பவனமான எனது கமலாலயத்தில் நுழைந்த நினைவை இன்று நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவர் அருள் புரிந்தார். அதனால் தான் நான் இந்த கமலாலயத்திற்கு வந்துள்ளேன்.. பாஜக 400 தொகுதிகளில் மட்டுமல்ல நானும் ஒரு தொகுதியில் வெல்வதே லட்சியம் என்று கூறினார் தமிழிசை செளந்தரராஜன்.
மாநில தலைவர் அண்ணாமலையை பாசத்துடன் தம்பி என்று அழைத்துப் பேசினார் தமிழிசை.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}