டெல்லி/சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் வகையில், மத்திய அரசு 7 நாள் அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசும் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார உயர்வின் சிற்பியாக விளங்கிய மன்மோகன் சிங் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இன்றைய இந்தியாவின் வலிவுக்கு வித்திட்டவர். அவரது அரசின் கொள்கைகள் காரணமாக இந்தியாவின் தொழிற்துறை மாபெரும் வளர்ச்சியை கண்டது. இந்தியாவின் ஒரே சீக்கிய பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங்( 92) வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரவு 9:51 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் என பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயரிழப்பிற்கு தமிழ்நாடு அரசு ஏழு நாள் தூக்கம் அனுசரிக்கப்பட இருப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும். தமிழ்நாட்டில் ஏழு நாட்கள் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் 7 நாட்கள் நடைபெறாது அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசும் துக்கம் அனுசரிப்பு
அதேபோல மத்திய அரசும் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ராஜ்காட்டில் நாளை நடைபெறவுள்ள மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதைகளுடன் நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதே சமயத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக காங்கிரஸ் சார்பில் அடுத்த ஏழு நாட்களுக்கு அனைத்து கட்சி நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
{{comments.comment}}