முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

Dec 12, 2025,12:39 PM IST

புனே: முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உடல்நலக்குறைவால் காலமானார்.


முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உடல்நலக்குறைவால் மஹாராஷ்டிரா, லத்தூரில் தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 91. இவர் தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். 




1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக பதவி வகித்திருந்தார். 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2010 முதல் 2015ம் ஆண்டு வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் பதவி வகித்திஓந்தார். 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். வர்த்தகத் துறை மற்றும் விமானபப் போக்குவரத்து துறை அமைச்சராகவும் சிவராஜ் பாட்டீல் பதவி வகித்தார்.


அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்