- பூரணவள்ளி சேகர்
இரவு நடுநிசி நேரம் வெளியில் ஒரு குடுப்பைக்காரன் வாக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்ட கவிதாவும் கண்ணனும் சிறிது பயந்தனர். அவன் சொன்னதில் இந்தத் தெருவில் இன்று ஒரு மரணம் ஏற்படும் என்று சொன்னது மட்டும் காதில் விழுந்தது. மற்றவை ஒன்றும் புரியாமல் இருந்தனர்.
அவர்களுக்கு அந்தத் தெருவில் கடைசி வீட்டில் இருக்கும் கமலா பாட்டிதான் நினைவில் வந்தாள். கடந்த ஒரு வாரமாக கமலா பாட்டி மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். இரவில் வந்த குடுகுடுப்பைக்காரன் மீண்டும் மறுநாள் காலையில் வந்து முதல் நாள் இரவில் கூறியனவற்றைக் கூறிச் சென்றான்.

கண்ணன் அவசர வேலை இருப்பதாகக் கூறி அலுவலகத்திற்கு சீக்கிரமாகக் கிளம்பிச் சென்றான். இடையிடையே இரவில் கேட்ட வார்த்தைகள் நிழலாடின. பிற்பகலில் அலுவலக வேலைகளுக்கு இடையே அதை மறந்தான். வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது அந்தத் தெருவில் உள்ள பலர் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட கண்ணனுக்கு கமலா பாட்டியின் நினைவு வந்தது.
வீட்டிற்குள் நுழைந்த கண்ணன் கவிதாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்தான். காலையில் குறி கூறிய குடுகுடுப்பைக்காரன் அந்த வழியாக வந்த பிரேக் பிடிக்காத லாரியில் அடிபட்டு இறந்து விட்டதாகக் கவிதா கூறினாள்.
குடுகுடுப்பைக்காரனின் வாக்குப் பலித்தது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}