திருவண்ணாமலையில் கொடுமை.. முக்தி அடைவதற்காக.. விஷம் அருந்தி வாழ்க்கையை முடித்த 4 பேர்!

Dec 28, 2024,06:49 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் முக்தி அடைவதற்காக விஷம் அருந்தி தற்கொலை மூலம் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்ய தினசரி உள்ளூரிலிருந்தும் பிற மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஸ்ரீ மகாகாலவியாசகர், அவரது மனைவி ருக்மணி பிரியா, மகள் ஜலந்தரி மற்றும் மகன் முகுந்த் ஆகாஷ் குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று மதியம் 2 மணிக்கு திருவண்ணாமலை வந்துள்ளனர். ஆன்லைன் மூலம் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பார்ம் ஹவுஸில் பதிவு செய்து அங்கு வந்து தங்கி உள்ளனர். 


இந்த பார்ம் ஹவுஸில் இருந்து கொண்டே இரவில்  நாங்கள் நான்கு பேரும் இறைவனடி செல்லப் போகிறோம் என வீடியோ பதிவேற்றம் செய்துள்ளனர். அதேபோல் 10 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.




இன்று காலை  பார்ம் ஹவுஸ் மிக நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த பார்ம் ஹவுஸ் உரிமையாளர் உடனடியாக  திருவண்ணாமலை ரூரல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது நான்கு பேரும் சடலமாக கிடந்தனர். இதனையடுத்து நான்கு பேர் உடல்களையும் கைப்பற்றி போலீசார்  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இது தொடர்பாக போலீசார்  விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது ஸ்ரீ மகா கால வியாசர் தீவிர சிவ பக்தர் என்பதும், மாதந்தோறும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் மேற்கொண்டு இரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்வார் எனவும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் திருவண்ணாமலையில் முக்தி அடைவதற்காக தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் கிடைத்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மட்டுமல்லாமல் ஆன்மீக பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இப்படியெல்லாமா உயிரை விடுவது!


தற்போது உள்ள காலகட்டத்தில் உயிர்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.  எதற்கெடுத்தாலும் தற்கொலை என்ற முடிவைக் கையில் எடுத்து விடுகிறார்கள் பலரும். முதலில் பெரிய பிரச்சினைகளை சமாளிக்க முடியாததால்  தற்கொலை செய்யும் காலம் போய் தற்போது சிறு சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்வது பேஷன் ஆகி வந்தது. அதிலும் இப்போது புதுசு புதுசா தினுசு தினுசா கதை சொல்லி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. 


சமீபத்தில் தான் காதலன் புஷ்பா 2 படத்திற்கு செல்ல வேண்டாம் என்பதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் ஒரு பெண். அந்த வரிசையில் தற்போது முக்தி அடைவதற்காக ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் மன நிலை ஏன் இப்படி போக ஆரம்பித்துள்ளது என்ற வேதனைதான் எழுகிறது.


கற்காலத்தில் சித்தர்கள் ஒருவேளை உணவு மட்டுமே உண்டு காற்றை மட்டுமே சுவாசித்து இறைவனை மட்டுமே நினைத்துக் கொண்டு வாழ்ந்து  வந்தனர். ஆழ்நிலை தியானத்தை மிகத் தீவிரமாக கடைபிடித்தனர். மது, மாமிசம், கூடா நட்பு, கெட்ட பழக்கம் வழக்கம், முதலியவற்றை புறம் தள்ளி ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இறைவன் ஒருவனே என்பதை மனதிலும் தனது தியானத்திலும் நிலைநிறுத்தி கடவுளை சரணடைந்தனர். இதற்கு எத்தனை ஆண்டு காலம் தவ வலிமை பெற்றார்கள் என்பது தெரியுமா அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது தெரியுமா..  இந்த கஷ்டத்திற்கு பிறகு தான் முத்தி என்ற தியான நிலையை அடைந்தார்கள் என்பது தெரியுமா.. இதெல்லாம் தெரிந்து கொள்ளாமல் முக்தி ஸ்தலம் என்பதற்காக அந்த இடத்தில் தற்கொலை செய்து இறந்தால் முக்தி கிடைக்கும் என்ற எண்ணத்தை என்னவென்று சொல்வது!


உயிர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.. நல்ல வாழ்க்கையை வாழ்ந்து முடித்தாலே அவரவர் நம்பிக்கைகேற்ற முக்தியை கண்டிப்பாக அடையலாமே.. எனவே வாழுங்கள். அதுதான் முக்கியம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்