டெல்லி: நாடாளுமன்றத்திற்குள் இருவரும், வெளியே இருவரும் என்று நான்கு பேர் இன்று அத்துமீறியுள்ளனர். இந்த நான்கு பேரில் ஒருவர் பெண். இவர்களைப் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். இந்த நான்கு பேரும் யார், எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற லோக்சபாவுக்குள் கலர் புகையைத் தூவி நடத்திய இந்த "தாக்குதல்" பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லோக்சசபாவிற்குள் மொத்தம் 2 பேர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இருவரும் ஜீன்ஸ், டீசர்ட் அணிந்திருந்த இளைஞர்கள் ஆவர். அவர்கள் இருவரையும் லோக்சபா மார்ஷல்கள் விரட்டிப் பிடித்து வெளியே கொண்டு சென்றனர். இந்த இருவரும் பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்தபோது காலில் இருந்த கலர் புகையை வெளியேற்றினர். கிட்டத்தட்ட கண்ணீர்ப் புகை போல அது இருந்தது. மஞ்சள் நிறத்தில் அந்தப் புகை இருந்தது.
லோக்சபா வளாகத்திற்குள் இரு இளைஞர்கள் பிடிபட்ட நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே போக்குவரத்து பவன் அருகே 2 பேர் இதே போல புகையைப் பரப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஹிஸ்ஸாரைச் சேர்ந்த நீலம் என்பவர் பெண். இன்னொருவர் பெயர் அமோல் ஷிண்டே, இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இருவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இருவரும் உரத்த குரலில் கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிடிபட்ட நான்கு பேரும் திட்டமிட்டு இதைச் செய்ததாக கருதப்படுகிறது. நான்கு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் தாக்குதலில் ஈடுபட்டவரில் ஒருவர் பெயர் சாகர் சரமா என்று தெரிய வந்துள்ளது. இன்னொருவர் பெயர் வெளியாகவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், பல்வேறு விசாரணை அமைப்புகள் இணைந்து விசாரணையில் ஈடுபட்டிருப்பதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}