சபாஷ் டீச்சர்ஸ்.. தேசிய புதுமை கல்வி ரத்னா விருது.. தமிழ்நாட்டிலிருந்து 4 ஆசிரியர்கள் தேர்வு!

Jan 28, 2026,04:33 PM IST

டெல்லி: தேசிய அளவில் வழங்கப்படும் தேசிய புதுமை கல்வி ரத்னா விருது பெற தமிழ்நாட்டிலிருந்து நான்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து வழங்கப்படும் விருதுதான் தேசிய புதுமை கல்வி ரத்னா விருது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் பிரத்யேக விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.




2025–26க்கான தேசிய புதுமை கல்வி ரத்னா விருதுக்கான தேர்வு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலிருந்து நான்கு ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.


திருவண்ணாமலை மாவட்டம் வ. துர்காதேவி




அவர்களில் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம், நெசல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் வ. துர்காதேவி ஆவார். அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச பயப்படாமல், தன்னம்பிக்கையுடன் பேச அவர் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார்.


மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்துதல், கண்ணாடி எழுத்து, இரு கையாலும் எழுதுதல், தலைகீழ் எழுத்து போன்ற புதிய எழுத்துப் பயிற்சிகளை அளித்தல், மேலும் AI அடிப்படையிலான கல்வி பாடப் பொருட்கள் தயாரித்தல் போன்ற பல புதுமையான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.


இந்தத் விருது, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவர் காட்டி வரும் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த தேசிய அளவிலான பாராட்டாகக் கருதப்படுகிறது.


ஆசிரியர் வ. துர்காதேவி சிறந்த படைப்பாளியாகவும் விளங்குகிறார். கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் தவிர்த்து கவிதைகள் எழுதுவதிலும் வல்லவராக திகழ்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலக் கவிதைகள் எழுதுவதிலும் புலமை மிக்கவராக இருக்கிறார் வ. துர்காதேவி.


செங்கல்பட்டு மாவட்டம் வே. ஜெயந்தி




விருது பெறும் ஆசிரியர்களில் இன்னொருவர், செங்கல்பட்டு மாவட்டம், கொங்கணஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் வெ. ஜெயந்தி. 


தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தல் முறைகள் (ICT), மதிப்புக் கல்வி மற்றும் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் இவரது படைப்பாற்றல் மிக்க இலக்கிய முயற்சிகளுக்காக அவர் பரவலாகப் பாராட்டப்படுகிறார்.


கற்பித்தல் பணியுடன் மட்டுமல்லாமல், இவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் விளங்குகிறார். இவரது ஆங்கிலக் கவிதைகள் கென்யா நாட்டின் தினசரி செய்தித்தாள் உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு ஆசிரியர் பயிற்சித் திட்டங்களில் கருத்தாளராகப் பணியாற்றி, சக ஆசிரியர்களுடன் புதுமையான மற்றும் பயனுள்ள கற்பித்தல் உத்திகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.


கல்வி மற்றும் இலக்கியத் துறையில் இவரது சிறப்பான பங்களிப்பிற்காக ஏற்கனவே கல்விச் செம்மல் விருது, நல்லாசிரியர் விருது மற்றும் பாரதி சுடர் விருது உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர்கள் வ. துர்காதேவி மற்றும் வே. ஜெயந்தி ஆகிய இருவரும், திருமதி டி.பிருந்தா தலைமையிலான Creative Writers குழு மூலமாக ஏராளமான ஆங்கிலக் கவிதைகள் உள்ளிட்ட படைப்புகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்