வேலூர்: வேலூர் குடியாத்தம் அருகே தந்தை மீது மிளகாய் பொடி தூவி, காரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் காவல்துறையால் மீட்கப்பட்டார்.
வேலூர் குடியாத்தம் பகுதியில், பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய 4 வயது சிறுவன் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தந்தை மீது மிளகாய் பொடி தூவி மர்ம கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
சாலையில் ஓரமாக காரை நிறுத்தி விட்டு காத்திருந்த மர்ம கும்பல் ஒன்று, பள்ளி சென்று திரும்பிய குழந்தையை வீடு புகுத்து தூக்கி சென்றுள்ளனர். இதனை அறிந்த சிறுவனின் தந்தை குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். காரில் இருந்த மர்ம நபர்கள் குழந்தையின் தந்தை மீது மிளகாய் பொடி தூவியதுடன், சிறுது தூரம் காரில் சிறுவனின் தந்தை வேணுவை இழுத்துச் சென்ற நிலையில், மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து சென்றுள்ளது.

கர்நாடக பதிவு எண் கொண்ட அந்த வெள்ளை நிற சொகுசு காரில் குழந்தை கடத்தப்படுவதைக் கண்டு தந்தை வேணு பதறிபோய் கூச்சலிட்ட நிலையில், போலீசாரிம் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மஞ்சக்கொல்லை என்ற இடத்தில், குழந்தையை கடத்தல் கும்பல் விட்டுசென்றுள்ளனர். தனிப்படை போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கடத்தல்காரர்கள் வந்த காரின் பதிவு எண் போலியானது என்று தெரியவந்துள்ளது.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 10, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்
ஐப்பசி மாத தேய்பிறை சஷ்டி.. நல்ல ஆரோக்கியத்தையும் ஆன்மீக சக்தியையும் அளிக்கும்!
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
{{comments.comment}}