மணிப்பூரில் மீண்டும் வன்முறை, துப்பாக்கிச்சூடு... 2 பேர் பலி

Aug 30, 2023,11:54 AM IST
இம்பால் : மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொயிரடக் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜங்மின்லுன் கங்தே என்ற 30 வயது தன்னார்வலர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதே போல் நரன்செயினா என்ற கிராமத்தில் வயலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சலர் ஜோடின் என்பவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 

நெஞ்சில் குண்டு காயங்களுடன் இருந்த அவர் தற்போது இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

மாவட்ட போலீசார், அசாம் ஊர்காவல் படை, ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர் தலையிட்ட பிறகு அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஜாதி பிரச்சனை காரணமாக இரு வேறு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

மணிப்பூரில் இந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் கலவரத்தில் இதுவரை 140 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்