சென்னை: திமுக கூட்டணியில் அத்தனை கட்சிகளுக்கும் சீட் கொடுத்து முடித்து விட்டார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் தொகுதிப் பங்கீட்டை முழுமையாக முடித்த முதல் கூட்டணியாக திமுக உருவெடுத்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் மக்கள் நீதி மய்யத்திற்கு லோக்சபா தேர்தலில் இதயத்தில் இடமும், ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட்டும் கொடுத்துள்ளது திமுக.
இவை தவிர காங்கிரஸுக்கு 9 தொகுதிகள், விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோருக்குத் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு கட்சி, முஸ்லீம் லீக், மதிமுக ஆகியோருக்கு தலா ஒரு சீட் தரப்பட்டுள்ளது. திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இன்று கடைசியாக காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து திமுக போட்டியிடும் தொகுதிகள் தெரிய வந்துள்ளன. இவைதான் திமுக போட்டியிடப் போகும் 21 தொகுதிகள்:
தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, நீலகிரி (தனி), ஈரோடு, பெரம்பலூர், தஞ்சாவூர், தென்காசி (தனி), தூத்துக்குடி, தேனி, ஆரணி.
திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் - முழு விவரம்:
காங்கிரஸ் (9+1)
புதுச்சேரி
கடலூர்
திருவள்ளூர் (தனி)
கிருஷ்ணகிரி
கரூர்
கன்னியாகுமரி
சிவகங்கை
மயிலாடுதுறை
திருநெல்வேலி
விருதுநகர்
விசிக (2)
விழுப்புரம் (தனி)
சிதம்பரம் (தனி)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மதுரை
திண்டுக்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
நாகப்பட்டனம் (தனி)
திருப்பூர்
மதிமுக
திருச்சிராப்பள்ளி
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
ராமநாதபுரம்
கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி
நாமக்கல்
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
{{comments.comment}}