சென்னை: ஓட்டு போடுவது நமது உரிமை.. நமது கடமை.. என்பதை உணர்ந்து நாளை மக்கள் வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர். அதேபோல, நடிகர், நடிகையரும் வாக்களிக்க தயாராக உள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் முக்கிய பிரபலங்கள், நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்கள் வாக்கினை செலுத்தி விரலில் மை வைத்து அதற்கான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்துவர். அந்த வகையில் நாளை நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக நடிகர் நடிகைகள் உட்பட அனைவரும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்துவார். நடிகர் விஜய் நீலாங்கரையில் தனது வீட்டுக்கு அருகே உள்ள வாக்குச்சாவடியில்தான் ஓட்டுப் போடுவார். நடிகர் அஜித் கொட்டிவாக்கத்திலும், கமல் எல்டாமஸ் சாலையில் உள்ள பள்ளியிலும் தங்களின் வாக்குகளை செலுத்துவார்கள். அதேபோல் மற்ற நடிகர் நடிகைகள் எங்கு எப்பொழுது தங்கள் வாக்கினை செலுத்துகிறார்கள் என்பதை இங்கே காண்போம்.

*சத்யராஜ்-நுங்கம்பாக்கம் இந்து சமயநிலை துறை ஆணையர் அலுவலகம்
*வாகை சந்திரசேகர்- கொட்டிவாக்கம், நெல்லை நாடார் பள்ளி
*கருணாகரன்- அட்வென்ட் கிறிஸ்டியன்ஸ் ஸ்கூல், திருவான்மியூர்
*கருணாஸ்- வைஸ் பிரசிடெண்ட் நடிகர் சங்கம்
*வரலட்சுமி-ஆம் ஸ்கூல், கோட்டூர்புரம்
*நாசர், கமலா நாசர்- வளசரவாக்கம்
*சிவகுமார், சூர்யா, கார்த்தி, ராஜசேகர் பாண்டியன் - தி. நகர்
*ஒய் ஜி மகேந்திரன்- திருவான்மியூர், அரசு உயர்நிலைப்பள்ளி
*காளி வெங்கட் - அரும்பாக்கம், குட் ஹோப் ஸ்கூல்
*திரிஷா குடும்பத்தினர் - டிடிகே சாலை செயின்ட் சேவியர் மெட்ரிகுலேஷன் பள்ளி.
* இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி - காவேரி ஸ்கூல், சாலிகிராமம்
* நடிகை பிரியா பவானிசங்கர் - மாம்பாக்கம் அரசுப் பள்ளி
* பிரேமலதா விஜயகாந்த், சண்முகப்பாண்டியன் - காவேரி ஸ்கூல், சாலிகிராமம்
* கவிஞர் வைரமுத்து - ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு நெடுஞ்சாலை
* பாக்கியராஜ் குடும்பத்தினர் - நுங்கம்பாக்கம் பிஎஸ்பிபி பள்ளி
* விக்ரம் - பெசன்ட்நகர்
* சிவகார்த்திகேயன் - குட்ஷெப்பர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி, வளசரவாக்கம்
* கெளதம்கார்த்திக் - ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
{{comments.comment}}